பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சியேட்டல் 21.5.85 331. கைவிடு, நீக்கு, தள்ளு, ஒதுக்கு, துற, தாழ்த்து, சிறுமைப் படுத்து என வரிசையாகக் காட்டி அவற்றுக்கு நேரான் ஆங்கிலச் சொற்களையும் தந்துள்ளனர். எடுத்துக்காட்டு களும் உடன் உள்ளன. சில ஒலி இல்லாத் தமிழ் எழுத்துக் களில் ஆங்கில எழுத்துக்களையே பெய்து எழுதியுள்ளனர். Verb என்ற சொல்லை வெர்" எனக் காட்டியுள்ளனர். அந்த முறை மாற்றப்பெற வேண்டும் எனவும் தமிழ் எழுத்தில் தமிழ் மரபுப்படி ஆக்கம் பெறவேண்டும் எனவும் கூறினேன். அவரும் அதுவே சரி' என்றனர். தமிழ் ஆங்கிலச் சொற்களுக்குத் தனித்தனிக் குறியீடுகள் அமைத் துள்ளமை பொருத்தமாகவுள்ளது. கூடியவரையில் தமிழ் வினைச் சொற்கள் அனைத்தையும் தொகுத்து, அவற்றிற் குத் தமிழில் அமைந்த எல்லாப்பொருள்களையும் தமிழிலும் (எடுத்துக்காட்டுடன்) ஆங்கிலத்திலும் விளக்கமுற்பட்டுள்ள னர். அவை பற்றிய ஒரு தொகுப்பினை (சில பக்கங்கள்) உடன் கொண்டுவருகின்றேன். சிறிது நேரம் கழித்து, 12-30 மணி அளவில் (இங்கே இடைவேளை 12 முதல் 1வரையாகும் வகுப்புகள் 9க்கே தொடங்கி மாலை 3 அல்லது 4க்கு முடிவடையும்). அவர் தம் மாணவியை அழைத்து அவர்தம் காரிலேயே எனக்கு ஊர் நலம் காட்டி, உயிர்க்காட்சிச் சாலையினையும் (200) காட்டுமாறு சொல்லி, மாலை 6மணிக்கு அவர் வீட்டில் விருந்துக்கு வருமாறும் வேண்டினார். திரு. சிப்மென் (Schitmen) நன்கு தமிழ் பேசுகிறார். தமிழ் நாட்டில் பல, நாட்கள் இருந்திருக்கிறார். வங்காளத்திலும் வாழ்ந்திருக் கிறார். அங்கே பிறந்த ஒரு மகன் வீட்டில் உள்ளான் என்றார். எளிமையாகவும் தன்மையாகவும் அனைவருட னும் பழகுகின்றார். ஒரு மணி அளவில் அந்த மாணவி, தன் காரில் எனை ஏற்றிக்கொண்டு சியேட்டல் நகர் முழுவதையும் காட்டி, 2.30க்கு மேல் உயிர்க் காட்சி சாலைக்குச் அழைத்துச் சென்றார். சியேட்டல்' என்ற ஊரின் பெயர்காரணத்தைக்