பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சியேட்டல் 21-5.85 333 வேறு வகையில் நன்கு அமைந்திருந்தது. பலவகை வெளவால் கூட்டங்கள், பிற பறவைகள், பலவகை எலி, பெரிச்சாலிகள் இருந்தன. நம் நாட்டுக் காக்கைகளை - இது வரை அமெரிக்கா நாட்டில் காணாத காக்கைகளை - இங்கே நம் ஊர்போல் எங்கும் பறக்கக் கண்டேன். அப்படியே நம் ஊர் வீட்டுக் குருவிகளும் அளவற்று இருந் தன. அக் காட்சிச் சாலை எங்கும் பலப்பல வண்ணங்களில் பலவகைப் பூக்கள் பூத்துக் குலுங்கி அழகிய காட்சிப் பொருளாக அமைந்து நின்றன. தென் அமெரிக்க நாட்டி லிருந்தும் இந்நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் பல அரிய விலங்குகள் - பறவைகள் இங்கே இடம் பெற்றிருந்தன. இடையிடையே தேவையான சிற்றுண்டி, பானங்களை அங்கே இருந்த சிறு கடையில் பெற்றுக் கொண்டோம். பிறகு 5 மணி அளவில் சற்றே ஒரு மரத்தடியில் இளைப்பாற அமர்ந்து, பின் பேராசிரியர் இல்லத்துக்குப் புறப்பட்டோம். வழியில் மாணவி, ஐஸ்கிரீம்' (குளிர்ந்த பசை, உணவு) வாங்கிக் கொண்டார்கள். அவர் எடுத்து வந்த வண்டி பெரிய (Chiverlet) செவர்லெட்: அதுவும் சாமான் ஏற்றக் கூடியது. அதை ஆடவரே செயல்படுத்தல் கடினம். எனினும் அம்மையார் அவர்கள் அதைத் திறம் படச் செலுத்திச் சரியாக 6மணிக்குப் பேராசிரியர் வீட்டு வாயிலில் நிறுத்தி னார். அவரும் எங்களை எதிர்பார்த்திருந்து வருக என வரவேற்றார். அவரும் அவர்தம் துணைவியாரும் ஐந்து வயது நிரம்பாத இளஞ்செல்வனும் நன்கு தமிழ் பேசுகிறார்கள். அவர்தம் மாமியார் வயதான மூதாட்டியார் அவர்களுடன் இருந்தனர். அமெரிக்க நாட்டில் காண முடியாத இந்த இனிய அருங்காட்சியினைக் கண்டு மிக மிக மகிழ்ந்தேன். அந்த அன்னையாரும் எனை அன்புடன் உபசரித்தன்ர். அதற்குள் பின் மாணவர் . ஆண்பெண் இருபாலரும் குடும்பங் களுடன் வந்து சேர்ந்தனர். வந்தவர் ஆறு குடும்பங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைப் பண்டம் செய்து