பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்பிரான்சிஸ்கோ (சியேட்டல்) 22.5.85 337 அவருடன் உண்மையில் என்னை மறந்து 55 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒருவனாகச் சுற்றி வந்தேன். அனைத்தையும் காட்டி விட்டு, பத்து மணி அளவில் வேறு பணியின் பொருட்டு வெளியே செல்வதாகவும், நான் பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் வரையில் திரும்பி வர இயலாதென்றும் கூறி, என்னிடம் அவர் தம் புதிய முகவரியையும் தந்து என் பயணம் சிறக்க என வாழ்த்தி விடைபெற்றார். அம்மை யாரும் தம் சமையல், வேலைகளை யெல்லாம் முடித்து, என்னை அடுத்துள்ள காடு, மலை, நீர் வீழ்ச்சி முதலியன காண அழைத்துச் செல்வதாகச் சொன்னார். சரியாகப் பதினொரு மணி அளவில் வெளியே புறப்பட் டோம்.சுமார் 15கல் தொலைவிலுள்ள அந்த நீர் வீழ்ச்சிக்குச் செல்லு முன் (Sno Ouazimie Falls) சில சிறிய கிராமங் களுக்குள் நுழைந்து நுழைந்து அவற்றின் நலன்களையெல் லாம் காட்டிச் சென்றனர். மிகச் சிறிய ஊராயினும் அவை கிராமங்கள் போலன்றி சிறு நகரங்களாகவே இருந்தன. எல்லா வசதிகளும் கடைகளும் கார்களும் அவற்றின் தேவை தீர்க்கும் எண்ணெய்க் கடைகளும் (Petrol Bunk) உணவுக் கடைகளும் பிறவும் இருந்தன. இரண்டு இடங்களில் இருந்த இரு பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்றனர். ஒன்றில் இடைவேளை நேரம்; எல்லாப் பிள்ளைகளும் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள பள்ளி அது. ஆண் பிள்ளைகள் உடலில் யாதொரு சொக்காய் - கஞ்சுகம் இன்றி இருந்தனர். பின் விளையாட்டு முடிந்ததும் அவரவர் உடைகளை அணிந்து வகுப்பிற்குச் சென்றனர். சிறிய பள்ளியாயினும் எல்லா வசதிகளும் இருந்தன. பஸ் வசதி யும் இருந்தது. சில பிள்ளைகள் கார்களிலும் வருவர் போலும். (பல கார்கள் நிறுத்தப் பெற்றிருந்தன) ஆசிரியர் களும் கார்கள் வைத்திருப்பர். வேறு ஊரில் மற்றொன்று. உயர் நிலைப் பள்ளி: அங்கும் ஆண் பிள்ளைகள் திறந்த உடலோடு விளையாடிக் கொண்டிருந்தனர். நாங்கள் ஏ.-22