பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்பிரான்சிஸ்கோ (சியேட்டல்) 22-5-85 339. யில் வாழ்ந்த பழங்குடிகள் சொகா - குவால் - கூ' என அழைக்கப் பெற்றனராம். அதுவே பின் நான் மேல் சொன்ன 'SNOGUALMIE என்ற பெயரைப் பெற்றதாம். இப்பழங் gış sçir (West İndian &yéüəvğı Red Indian) Gudsmay @5%uff எனப் பெற்றவராம். இந்தச் சொல்லின் பொருள் இவர்கள் சந்திரன் வழிவந்தவர் என்பதைக் காட்டுகிறதாம். இதைக் கேட்டவுடனே என் மனம் பாண்டிய நாட்டிற்குத் தாவிற்று. அங்கேயும் சந்திரவம்சத்தவராகத் தெற்கே பாண்டியரையும் வடக்கே பாண்டவரையும் அழைக்கிறோமே! ஒரு வேளை இவர்களும் அந்த இனத்தைச் சேர்ந்து எந்தப் பழங்காலத் திலோ இங்கு குடிவந்தவர்களோ என எண்ணினேன். சூரிய வம்சம் எங்கே என்று தேடவேண்டும். இந்த இடத்தில்தான் உலகிலேயே முதன்முதல் நிலத்தை அகழ்ந்து அடியில் குழாய் வழி நீரைச் செலுத்தி (Tunnals) மின்சாரம் எடுத்தது எனக் குறித்திருக்கின்றனர். (ஆண்டு 1898) எனவே இத்தகைய சந்திர குலத்தார் வாழ்ந்த பழம் பெரு நிலத்தில் - உயரிய நீர் விழ்ச்சிக்கருகில், உலகிலேயே நீர் வழி மின்சாரத்தை முதன்முதல் கண்ட பெருமண்ணில் நான் நிற்பதை எண்ணி மகிழ்ந்தேன். இந்த இயற்கைக் சூழலில் இங்கேயே இருந்து விடலாமா என நினைத்தேன். அது நடக்கிற காரியமா? அம்மையார் எனக்கென, அருகிலிருந்த கடைக்குச் சென்று நீர் வீழ்ச்சி யமைந்த இரு படங்களை வாங்கி வந்தனர். சுற்றிலும் இனிய பசும் புல் - மலர்ச் செடிகள் - பின் அடர்ந்த காடுகள் - அதற்கும் சற்றே உயர்ந்த பணிச் சிகரங்கள். இந்த உலகில் இயற்கை வழங்கும் எல்லாச் செல்வமும் உடைய பகுதி இதுவாகும். (நான் கண்ட வரை) நெடிது இருந்து 1மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டு இன்னும் உள்ளே சென்றோம். ஒரிடத்தில் இருபுறமும் அடர்ந்த உயர்ந்த மரங்கள் சாலையை மூடிக்கொண்டு வழி இருண்டு இருக்கச் செய்தன. ஒரு குகைக்குள் செல்வது போன்ற உணர்வு உண்டாயிற்று. மேலும் கடந்து, பெரிய