பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்பிரான்சிஸ்கோ (சியேட்டல்) 22-5-95 341 வரையிலான பயணத்துக்கும் பதிவு செய்து கொண்டேன். விமானம் 4.30க்கு எனினும் 5-25க்குத்தான் புறப்படும் என்றனர். எனவே ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந் தேன். என் சிந்தனை நீண்டது. ஜினிவாவில் வந்து இறங்கிய நாள் முதல் இன்று வரையில் சென்ற நாடுகள், தங்கிய ஊர் கள், கண்ட மக்கள், என்ன விருந்தேற்றுப் புரந்த அன்பர் கள், பல காட்சிகள் பல அன்பர்தம் நினைவுகள் என்முன் நிழலாடின. அமெரிக்க நாட்டுப் பயணத்தின் கடைசி கட்டத்தினையும் நான்கில் மூன்று பங்கு நிறைவுற்ற தன்மையினையும் இன்னும் உள்ள கால்பங்கின் பணியினை யும் எண்ணி எண்ணி நின்றேன். இன்று வழியனுப்பிய அமெரிக்க அன்னையார் என்னை மறுபடியும் இந்த நாட்டிற் குக் கட்டாயம் வரவேண்டும் என்று விடுத்த அனைப்பினை யும் கட்டாயம் வருவீர்கள் என்று அவர்கள் விடைபெறு முன் சொல்லிய சொற்களையும் எண்ணினேன். எமுபது வயதில் எழுபது நாள்கள் தனியாக உலகம் சுற்றும் நான் . முதன் முதலாகப் பலநாடுகளைக் கண்டு வரும் நான் மற்றொரு முறை அமெரிக்க நாடு வருவதா என நெடிது நினைந்தேன். 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உண்மையினை நான் சென்றவிடமெல்லாம் கண்டேனாத லால், அத்தகைய கேளிரை விருந்து புரந்த நல்லவர்களை - முன்பின் அறியாத . கண்டு பேசிய - பல மக்களை எல்லாம் எண்ணி எண்ணி நின்றேன். ஐந்து மணியாயிற்று. நாங்கள் செல்ல வேண்டிய விமானம் வேறு எங்கிருந்தோ வந்தது. பயணிகள் இறங்கிய பின் நாங்கள் அனுமதிக்கப் பெற்றோம். விமானம் சரியாக 5.25க்குப் புறப்பட்டது. வழிநெடுக மேக மூட்டம். நான் அவற்றை பனிப்படலங்களோ என எண்ணி, விமானப் பணிபெண்களைக் கேட்டேன். அவர்கள் அவை மேக மூட்டமே எனவும் பனிபடர் மலைத் தொடர் இப்பக்கம் இல்லை என்றும் கூறினர். மாலை 7.10க்கு விமானம் தரை கண்டது. - இறங்கி வெளியே வந்ததும் அன்பர் வெங்கடாசலம் அவர்கள் காத்திருந்தனர். ஒருமணி நேரத்துக்கு மேல்