பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் இந்த ஊர் சியேட்டிலைப் போன்று இல்லையாயினும் அகநகர் (Down Town) பெரும்பாலும் குன்றுகளின் மேல் அமைந்திருந்தது. சுற்றிலும் மலைகள் இருந்தன. எனினும் பசுமை இல்லை. பாறைகளோடு வரண்டநிலை அமைப்பே காணப்பெற்றது. இந்த ஊர் தீபகற்பம் போன்றும், இடை யில் கடல் உள்ளீடு அமைய மூன்று பக்கமும் பரவி இருந்தது. எனவே அவற்றை இணைக்க அக்கடல் உள்ளிட்டு வழி களுக்கு உய்ர்ந்த பாலங்கள் அமைத்துள்ளனர். Treasure island கருவூலத் தீவு என்னும் இடத்தை இணைத்த பாலம் மிகப்பெரியது, உயரியது. மேல், கீழ் இரண்டிடங்களிலும் இருபக்கப் போக்குவரத்தும் அமைய, தொங்குபாலமோ என்னுமாறு காட்சியளித்தது. அது சுமார் 2கல் நீளமிருக் கும். பிறகு அங்கிருந்து நிலத்தின் மற்றொரு பக்கத்திற்கும் அப்பால் அப்பாலம் சென்றது. அத் தீவின் பெயர் Herb (Yerba.suena) island - மூலிகைத்தீவு என்பதாகும். இத் தீவு இயற்கை அன்று எனவும் இந்த நூற்றாண்டிலேயே (1938) மக்களால் ஆக்கப்பெற்ற ஒன்று என்றும் கூறினர். ஒரு வேளை அங்கே மூலிகைகள் அதிகமாக இருந்தமையின் அப் பெயர் பெற்றது போலும். இப் பெயர் இத்தாலி மொழியிலிருந்து வந்ததாகவும் கூறினர். இது 480 ஏக்கர் பரப்பு உள்ளதாம். மூலிகைத்தீவில் இருந்து மறுபக்கம் செல்லும் பாலத்தை நோக்கினோம். வேறு ஒரு பக்கத்தில் (பர்க்கலே செல்லும் வழியில்) ஏழுகல் தொலைவில் கடற்வழி மேல் இவ்வாறு பாலம் அமைந்திருப்பதாகவும் சொன்னார். நாங்கள் சென்ற இப்பகுதியில் இந்நாட்டுக் கடற்படை நிற்கப் பெற்றிருப்ப தாகவும் உள் செல்ல இயலாதென்றும் கூறவே வந்தவழியே திரும்பி, அகநகர் புகுந்தோம். - அகநகரில் எங்கும் போன்று பல உயரிய கட்டடங்கள் இருந்தன. தெருக்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் நின்றன. பெருமலைகளில்கூட (உதகை போன்று) காணமுடியாத சரிவுகள் இருந்தன. வண்டிப் போக்குவரத்தும் அதிகம். வழிநெடுக உள்ள பெருங்கட்டடங்களைப் பற்றியெல்லாம்