பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்பிரான்சிஸ்கோ 23.5.85 345 ஊர்தி ஒட்டுநர் விளக்கம் தந்து கொண்டே சென்றார். தெருக்களிலும் இரெயில் மேம்பாலங்கள் இருந்தன. (சிகா கோவில் தெருவூடே கீழே சாலை - மேலே ரெயில் பாதை அமைந்து சென்ற நிலையினையும் எண்ணினேன்) இந்த ஊர் ஏறக்குறைய நம் சென்னை நகர் போன்று காட்சியளித்தது. நான் முன்னரே சுட்டியபடி இந்த மேலைப்பகுதி அமெரிக்கக் கீழ்ப் பகுதியினைக்காட்டிலும் பல வகையில் வேறுபட் டிருந்தது. இந்நகரில் சீனா, ஜப்பான், பிலிப்பயன் நாட்டு மக்கள் அதிகம் இருந்தனர். இந்நகர் 1850ல் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது என்றனர்: நம் ஊர் போலவே இங்கே சைக்கில் வண்டிகள் மிக அதிகம். எனினும் சியேட்டலில் பல்கலைக் கழகப் பகுதியில் சைகில் செல்வதற் கெனவே சாலையில் 8 அளவில் இட ஒதுக்கீடு செய்திருந் தமை போன்று (சென்னை அண்ணா சாலை போன்று) இங்கே ஒதுக்கீடு இல்லை. மேலும் இங்கே நம் ஊர் போன்று சைக்கில் ரிக்ஷா, குதிரை வண்டிகள் (கோச்) வாடகைக்கு இருந்தன. வாடகை மேட்டார் தவிர வேறு வசதியே இல்லை என இது வரையில் நாட்டில் கண்ட நிலைமாறி, இங்கே இந்த வசதிகளை யெல்லாம் கண்டேன். சாலை களின் நடுவிலே தண்டவாளம் இட்டு, டிராம் வண்டிகள் செல்லுகின்றன. நம் ஊர் போன்று எல்லா இடங்களுக்கும் போக நிறைய பஸ் வசதியும் உண்டு. தெருவில் பல இடங்களில் நம் நாட்டினைப் போன்றே கடைகளைப் பரப்பி வியாபாரம் செய்கின்றனர். மக்களும் பல நாட்டின ராய் . பல வகைப் பண்பினராய் - ஒன்றிக் கலந்து வாழ்வதைக் கண்டேன். நிலமும் நம் நாட்டினைப் போன்று வறண்ட - புல்லற்ற தரையாகவே இருந்தது. எங்கள் உந்து வண்டியை நிறுத்தி அந்த டிராமில்’ அனைவரையும் ஏற்றி 2கல் தொலைவு செல்லவிட்டு, மறுபடி பஸ்சில் ஏற்றிக் கொண்டார். இந்த மாதிரியான "டிராம் எங்கும் இல்லையாதலால், மக்கள் அதில் செல்வதை ஒரு பொழுது போக்காகவே, வேடிக்கையாகவே கொள்ளு கின்றனர்.