பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்பிரான்சிஸ்கோ 23.5.85 347 உல்லாசமாகக் கடலிலும் மேலும் சுற்றி வருகின்றனர். (உரிய கட்டணம் செலுத்தித்தான்) அங்கே பெரும்பாலும் சீனர்களேக்டைகளை வைத்திருந்தனர். கடல் நண்டு களே (பெரிது பெரிது) பக்குவம் செய்து (பொரித்து) வைத்திருந்தனர். பிற மாமிசப் பண்டங்களும் இருந்தன. எனக்கு வேதனையாக இருந்தது. சற்றே தள்ளிச்சென்று இருந்து, பின் பழங்கள், வேர்கடலை முதலியவற்றை வாங்கி உண்டு, குளிர் பானம் அருந்தி அமர்ந்திருந்தேன். மறுபடி யும் சரியாக 1.30க்கு சுற்றுலா தன் பயணத்தைத் தொடங் கியது. - . மறுபக்கத்தில் உள்ள பொன்வாயில் பாலத்தின் மேல் வண்டி சென்றது. (Golden Gate Bridge) அப்பக்கத்தில் வண்டியை நிறுத்தி அனைவரையும் இறங்கிக் காணச் செய்தார். சுற்றிலும் மலை - எதிரே கடல், இயற்கைச் சூழல் அழகுற அமைந்திருந்தது. மறுபடியும் சென்ற வழியே திரும்பினோம். வழியில் 1937ல் கட்டப் பெற்ற இராணுவ மருந்தகத்தை (1600 ஏக்கரில்) கண்டோம். நேற்று சியேட்டலில் கண்ட்தைக்காட்டிலும் இங்கும் வெட்டி வைக்கப் பெற்ற 20.16 குறுக்களவு கொண்ட பெருமரங் களின் துண்டுக்களைக் கண்டு வியந்தேன். இப்பகுதியில் சீனர்கள் அன்றி ஜப்பானியரும் மிக்கிருந்தனர். கடலை அடுத்த மலைப் பிரிவில் பெரும் மாளிகைகள் உயர்ந்து நின்றன. பம்பாயில் உள்ள செல்வர் வாழிடமே (Marine Drive) என இவை உள்ளன. விளக்குநரும் மிகப் பெருஞ் செல்வர்கள் இங்கு வாழ்கின்றனர் எனக் கூறினர். இந்தப் பகுதியில் இரஷ்யரும் (11,000 பேர்) மிகுதியாக உள்ளன ராம். இந்த நாட்டிலும் கடந்த சில ஆண்டுகளில்தான் 1975க்கு பிறகு (நம் நாட்டினைப் போன்றே) வீடுகள், மனைகள், இவற்றின் விலைகள் அளவிறந்து உயர்ந்து விட்டன என்கின்றனர். வெளிநாட்டினர் மிக அதிகமாக இப் பகுதிக்கு வரவர அதிகமாகின்றது என்றும் அதனால் எல்லாப் பொருள்களுமே விலை ஏறுகின்றன என்றும் கூறினர்.