பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாஸ் ஏஞ்சலஸ் 25.5.85 359 கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானு மதுவாகப் பாவித்துத்-தானும்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி' என்று பறவைகள் காட்டியும் ஒளவையார் என்றோ மனிதனுக்கு அறிவூட்டவில்லையா! அந்த நிலையினை இன்று என் கண்முன்னேயே கண்டேன். அவை பேசின-பேசிக் கொண்டே இருந்தன. மலர்களும் இதழ்களாகிய-செவ்வாய் இதழ் திறந்து பேசின. என்ன வென்று எனக்குத் திட்டமாகப் புரிய வில்லையாயினும், இவை மனிதனை மகிழ்விக்க வேண்டி அத்தகைய பாடல் களையும் பேச்சுகளையும் உதிர்த்தன. நான் அவைகளை எட்டிப் பிடிக்க நினைத்துக் கை நீட்டினேன். ஆனால் அவை திடீரென மறைந்தன: அங்கே ஒரு காடு. ஆம்! காட்டு நடுவிலே நான் செல்கிறேன். பலவகை மிருகங்கள், நான் செல்லுவது ஒரு காட்டாறு: சிறுபடகில் ஊர்ந்து செல்கிறேன். பக்கத்திலே பெருமீன்கள், முதலை கள்-காண்டாமிருகங்கள்-பிற நீர்வாழ்வன எப்போது என் படகைக் கவிழ்க்குமோ என அஞ்சுகிறேன். கரையில் செல்லலாம்ா என்றால் அங்கெல்லாம் என்னை வைத்த விழிவாங்காமல் பார்க்கும் சிங்கங்கள்.புலிகள் - யானைகள். கரடிகள் - இன்னும் என்னென்னவோ. அச்சத்தால் கண் மூடித்திறந்தேன். நல்லவேளை அவைகள் இல்லை. ஆனால் அவற்றினும் கொடிய பழங்கால நாகரிக மக்கள் கைகளில் வில்லும் வாளும் பிறவும் ஏந்தி - மக்களைப் பிடித்து விழுங்கும் கொலை நோக்கோடு - கரைகளில் காத்து நிற்கின்றனர். வனவிலங்குகளிலிருந்து தப்பினாலும் தப்ப லாம், இவர்களிடமிருந்து தப்பமுடியாதே என வருந்தினேன். சிலர் மிக அருகே வந்து என்னைப் பிடிப்பது போலவே இருந்தனர். தூரத்தே அவர்கள் தொழும் தெய்வம் மர நிழலில் பெரு உருவில் நின்றது. நான் இன்று இந்த தெய்வத் திற்குப் பலியாவேனோ என எண்ணி அத் தெய்வத்தைப் பரவிக் கண்ணை முடினேன்.