பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாஸ்ஏஞ்சலஸ் 25-5-85 361 என்ற மாணிக்கவாசகர் அடிகள் என் கண் முன் உண்மைக் காட்சியாக விளங்கின. இவற்றை என்றைக்கோ எண்ணிப் பாடிய அந்தப் பெருந்தகையாரை நான் எண்ணிப் போற்றினேன். அதற்குள் அந்த வானவீதியில்தான் எத்தனை எத்தனை வண்ண ஜாலங்கள்! - வெடிகள் - அதிர்ச்சிகள் - இன்னும் என்னென்னவோ! என்னால் விளக்க முடியவில்லை (ஒரு வேலை வானாராய்ச்சி செய்யும் வல்லவர் கள் சொல்வார்களோ என்னவோ!) அத்தனை வண்ணக் களஞ்சியம் ஆகப் பல்ப்பல உலகுகள் சமைத் தாய், என்று பலகோடி இன்பம் வைத்த இறைவனைப் பாடிய பாரதியார் அடிகள்தான் என் எண்ணத்துக்கு வந்தன. அங்கிருந்து எங்கோ தாவினேன்! அது ஒரு உலகம். அங்கே மனிதர்களே இல்லையே! இது என்ன! மண்ணும் கல்லும் பிறவும் நம் பூமி போல் இருக்கிறதே - ஆனால் இது இந்தியாவோ அமெரிக்காவோ இல்லையே. ஒருவர்கூட - ஒர் உயிர்கூட இல்லையே என அச்சத்தோடு அங்கும் இங்கும் பார்த்தேன். எங்கிருந்தோ இனிய குரல் ஒன்று கேட்டது. 'அன்பா! அஞ்சாதே! இதுதான் செவ்வாய்க் கிரகம்! இதில் மக்கள் வாழலாம். உங்கள் பூமியைவிட்டு, பொல்லாத மனிதர்களை வீட்டு நீ நெடுந்துாரம் வந்துவிட்டாய். மனிதன் இங்கே வாழ நினைத்தான் - வளைந்து வளைந்து ஆராய்ச்சி செய்தான் - ஆனால் அதற்குள் அவன் மூளை அழிவுப் பாதைக்கு அவனை அழைத்துச் சென்று விட்டது. உலகை அழிக்க ஒரு அணுகுண்டு போதும் அல்லது அமெரிக்காவில் ஒர் ஊரிலுள்ள (சியேட்டல்) ஆயிரம் அணுகுண்டுகள் மட்டும் உலகையே இதுபோல உயிரற்ற வெட்டவெளியாக்கி விடும். ஆனால் இருபெரு வல்லரசுகளும் - இன்னும் சிலரும் போட்டியிட்டுக் கொண்டு ஆயிரமாயிரமாக அணு குண்டு களைச் செய்து குவிக்கின்றனர். ஆம்! அவை என்றாவது ஒருநாள் - அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திடீரென பூகம்பத்தாலோ - பிற அசைவு ஆட்டங்களி னாலோ வெடித்து காளமா முனிவர் பூதத்தால் விழுங்கப்