பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பெற்றமை போன்று. செய்த அவனையே - அவன் மனித இனத்தையே - உயிரினத்தையே அழித்து உவகை வெறும் தரையாக்கும். அவன் திருந்தினால் வழி உண்டு எங்கே திருந்தப் போகிறான். ஒரு வேளை உன் வாழ்நாளிலேயே இவற்றைக் காணலாம். ஆனால் நீ மட்டும் காண இருக்கப் போகிறாயா?" என்று கேட்டது. அப்பா நான் செத்தேன் என்று அஞ்சி வெறுவினேன். நாளை உலகம் எப்படி எப்படி இருக்கும் என்று எண்ணினேன். ஆம்! நாளை உலகம் - அணு ஆய்வில் தன்னைப் பரிகொடுத்த அந்த உலகில் திடீரெனத் தள்ளப்பெற்றேன். அந்த மனிதன் அணுவினைக் கொண்டு என்னென்னவோ செய்து கொண்டிருந்தான். பலப்பல விதமான காட்சிகள் . வி ைளவு க ள் - விபரீதங்கள் . வேடிக்கைகள் - என்னென் னவோ, அவை எனக்குப் புரிந்தால்தானே - ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது. அவன் அணு ஆராய்ச்சியெல்லாம் உலகைச் சாம்பலாக்கும் என்ற உணர்வு மட்டும் உள்ளத்தில் தோன்றியது. நான் நினைத்தது தவறோ என்னவோ - திடீரெனக் கீழே தள்ளப்பெற்றேன். அமெரிககா நாட்டிலே எங்கெங்கோ சுற்றித் திரிந்தேன். பனிபடர்மலைகள் - காடுகள் - பாறைகள் செறிந்த மலைச்சரிவுகள் - அவற்றின் வழி அலைந்தோடும் கானாறுகள் - வண்ணப் பசுந்தரைகள் - நெடிய மரங்கள் . உயரிய சிகரங்கள் - பனிக்கட்டிகள் - அவ்ற்றில் சறுக்குமரம் விளையாடும் பாவையர்கள் - அந்நாட்டிலே பறக்கும் வண்ணப் பறவைகள், பெருவிலங்குகள் - மனிதன் அமைத்த மாடமாளிகைகள் - உயரிய கோபுரக் கட்டிடங்கள் - அவன் கண்ட ஆராய்ச்சிகள் - வான ஊர்தி இப்படித்தான் அன்று தொட்டு இன்று வரை வளர்ந்தது எனக்காட்டும் திரைப் படங்கள் - இன்னும் என்னென்னவோ கண்டு - நல்ல வேளை அமெரிக்காவிற்கு வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் என்னை மறந்தேன் - எதிரில் அமெரிக்கா பாடுகிறது’