பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாஸ் ஏஞ்சிலஸ் 26-5.85 விடியற்காலை முறைப்படி எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டேன். 9-மணி அளவில் பொறியாளர் திரு. நாராயணன் அவர்கள் வீட்டில் ஷிலாவையும் என்னை யும் விட்டுவீட்டு, அவர்களுடன் ஆலிவுட் நகரைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தனர். அவரும் சென்னை பிரம்பூரைச் சேர்ந்தவர். இரண்டு பிள்ளைகள், அவர்தம் துணைவியார் அனைவரும் வரவேற்றனர். பின்னர் அப்பிள்ளைகளுடன் நாங்களும் திரு. நாராயணன் காரிலேயே 40கல் தொலைவில் உள்ள அந்த அதிசய உலகம் நோக்கிப் புறப்பட்டோம். பிறகு மாலை நான்கு மணிக்குத் திரும்பினோம். அடுத்து திரு. பத்மநாதன் அவர்கள் குடும்பத்துடன் உலகிலேய்ே, நீண்ட கடற்கரையைக் காணப் புறப்பட்டு அங்கே இருந்து இரவு 8மணி அளவில் வீடு திரும்பினோம். இந்த இரண்டு நாட்களிலும் பலவிடங்களில் சுற்றிப் பார்த்ததில் நான் முன் சொன்னபடி, அமெரிக்க நாட்டின் இம் மேலைப் பகுதி எல்லாவற்றிலும் நம் நாட்டொடு ஒத்து இருந்தது என உறுதி செய்தேன்.முன் சியேட்டல்,சான்பிரான்சிஸ்கோ இரு இடங்களில் எழுதிய குறிப்புக்களில் நம் நாட்டின் நிலை யோடும் வாழ்வொடும் இப்பகுதி எவ்வாறு பொருந்திற் றெனக் காட்டியுள்ளேன். இங்கே இன்னும் சில கண்டேன். நம் நாட்டினைப் போன்று இப்பக்கத்தில் சாலை ஓரங்களில் மரங்களை வைத்து வளர்க்கின்றனர்.அழகிய நிழல்தரு மரங் கள். எங்கெங்கும் பனைமரங்கள் - ஈச்சமரங்கள் நிறைய உள்ளன. தென்னையும் மாவும். இங்கே பயிராகிப் பயன் தருகின்றன. வாழை அழகாக மடல் விரிந்து வளர்ந்து,