பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் காலை மணி ஒன்பதுக்கே நாங்கள் புறப்பட்டு 'ஆலிவுட் அடைந்தோம். நேற்றைப் போலவே காலை யாதலால் அதிகக் கூட்டம் இல்லை. எனவே நுழைவுச் சீட்டினை எடுத்து அனைவரும் உள்ளே சென்றோம். உலக மக்களைப் படக் காட்சிகள் மூலம் மகிழ்விக்கும் ஒரு பெரு நகரில் புகுந்தோம். அங்கே சுற்றிக் காட்டும் இரெயில் ஒன்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, படங்கள் எவ்வாறு எடுக்கப் பெறுகின்றன; இயற்கைக் காட்சிகளும் செயற்கைக் காட்சிகளும், பெரும் போர்களும் சண்டைகளும் பிறவும் எப்படி நடக்கின்றன என்பவற்றை யெல்லாம் விளக்கிக் காட்டுகின்றனர். அவற்றுடன் தனியாக நான்கைந்து இடங்களில் வேறு சில விலங்கொடு பழகும் காட்சிகள், தற்காலப் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் போன்றவற்றையும் காட்டுகின்றனர். எங்களுக்கு இரெயிலில் செல்ல 11.30க்கு நேரம் குறித்திருந்தபடியால், அதற்குள் உள்ளே சில இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். எங்கேயும் உள்ளமை போன்று இங்கேயும் பெருங்கடைகளும் உணவகங்களும் எண்ணற்றுக் காட்சி தந்தன. அவற்றுள்ளும் மக்கள் கூட்டம் குறையவில்லை. படங்களில் காட்டும் எத்தனையோ பிரமிப்பூட்டும் காட்சிகள் இங்கே கண்முன்னே காட்டப் பெறுகின்றன. அவை எவ்வளவு எளிதாக, சாதாரண முறையில் அமைக்கப் பெற்று, பின் வியக்கும்வண்ணம் காட்சிகளாக மாற்றப் பெறுகின்றன என்பதை விளக்கினர். முதலில் பறவைகள், விலங்குகள் (நாய், பூனை, குரங்கு, கரடி முதலியன) எவ்வாறு எளிமையாகப் பழக்கப் பெறுகின்றன என்பதைத் தனியாக ஒரு காட்சிக் சாலையில் காட்டினர். அவற்றைக் காண்பதற்கென-மேலே சீலைகள் இட்ட, அகன்ற, உள்அடுக்குப் பலகைகள் அமைந்த பெரு அரங்கங்கள் அமைக்கப் பெற்றிருந்தன. விலங்குகள், பறவைகள் காட்டும் வினோதக் காட்சிகளைக் கண்ட நாங்கள் அடுத்து, தனி மனிதர் துப்பாக்கி ஏந்தி எவ்வெவ்வகையில் போரிடு