பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாஸ்ஏஞ்சலஸ் 26-5.85 373 ஒடிய்து: நாங்கள் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்து சேர்ந்தது. மணி பிற்பகல் 2.30 உடன் உருகிருந்த மற்றொரு காட்சியினைக் கண்டோம். அங்கே பெரும் பீரங்கி, துப்பாக்கி, டாங்கி போன்றவற்றைக் கொண்டு நடத்தப்பெறும் பெரும் போர்களைக் க்ாட்டினர். அஞ்சத் தக்கதாக இருந்தது. பல கோர்வை வெடிகள், கொளுத்தும் காட்சிகள் . இடியும் மனைகள் - இப்படி எ த் த ைன எத்தனையோ மணி 3. இந்த உலகமே நாடகம்' என்று நல்ல அடியவர் பாடிய அடிகள் நினைவுக்கு வர, 'நாடகமே. உலகம்' என்று தமிழ்ப்பட உலகில் பாடிய பாட்டும் நினைவுக்குவர, இவை எல்லாம் வெளிமயக்கே' என்று, நகரின் எல்லைக்கு வெளிவந்து வீட்டிற்குப் புறப்பட்டோம். வீட்டில் சிறிது இனிய பானம் பருகினோம். 'காரி' லேயே நாங்கள் கொண்டு சென்றிருந்த சிற்றுண்டிகளை உண்டோம். எனவே வீட்டில் சிறிது பானம் பருகி, திரு. பத்மநாபன் குடும்பத்துடன் உலகிலே உயர்ந்த, நீண்ட கடற்கரையினைக் காணப்புறப்பட்டேன். 15 கல் தாண்டி அக்கடற்கரை இருந்தது. நான் முன் கூறியபடி வழியிடை நம் நாட்டு மரங்கள் - பழச்செடிகள் ஆரஞ்சு, மா முதலிய மரங்கள் கண்டேன். கடற்கரையில் நிரம்பப் பனையும் சந்தும் இருந்தன. ஒரத்தில் வண்டியை நிறுத்தி, கடல் அருகில் சென்றோம். மிகப்பரந்த ஆழமான பசிபிக் கடற்கரையில் - சென்னையில் இருப்பது ப்ோன்ற நினைவு வந்தது. அகன்ற மணல்வெளி - ஆனால் அசுத்தப்படுத்து பவர் - மல்ஜலம் கழிப்பவர் இல்லை. கட்டுமரங்கள் வரிசையாக நிறுத்தப் பெறுநிலை இல்லை. எங்கும் விரித்த வலை இல்லை. விற்பனையாக வடையும் முறுக்கும் சுண்டலும் இல்லை. தூய்மையாக இருந்தது. பலர் கடலில் நீந்தி, குளித்து, விளையாடினர். 500 அடிக்கு ஒரிடத்தில் ஒரு மரப்பொதும்பர் இருக்க - அங்கிருந்து காவலர் ஒருவர் கடல் நோக்கியும் தரையைச் சுற்றிக் கண்டும் காவல். புரிகின்றார். கடலில் யாரேனும் தவறி விழின் தூக்கி வரவும், தரையில் திருட்டு முதலியன நடந்தால் கண்டு