பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

874. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பிடிக்கவும் வைத்த கண் வாங்காது நின்றிருக்கின்றனர். மிகச் சிறந்ததாக, உலகத்தில் இரண்டாவதான - முதலாவ தான இதற்கு அடுத்த சென்னைக் கடற்கரை எப்படி நிலைகெட்டிருக்கிறது என்பதை நினைக்க எனக்கு மிக்க வருத்தமே உண்டாயிற்று. நான் என்ன செய்யமுடியும்? சுமார் 60 ஆண்டுகளாக அமைதியாக அதைக் கண்டு வருபவன் நான். இக் கடற்கரையில் ஒருமணி நேரத்துக்கு மேலே உட்கார்ந்திருந்தோம். இந் நாட்டு மக்களுள் பலர் இங்கே அதற்கென அமைந்த இடத்தில், அடுப்பிட்டு உணவாக்கி உண்டு, இடத்தைத் துப்புரவு செய்து செல்லு கின்றன. ஆழ்கடலில் அமிழ்ந்து எழுகின்றனர். ஆம்! ஆனந்தக் கடலிலும்தான். அவர்கள் பொழுதுபோக்கு அந்த கடலுக்குப் பொலிவைத் தருகிறது. இளஞ்சிறுவர்கள் நம் நாட்டைப் போன்றே காற்றாடி விடுகின்றனர். காற்றும் கடலும் நிலமும் உணவைச் சமைக்கும் நெருப்பும் அவற்றின் மேலாகிய விண்ணும் ஆகிய ஐம்பூத அமைப் பினைக் கண்டு நிலம் நீர் தீ வளி விசும்பு’ என நின்ற இறைவனை வணங்கி அங்கிருந்து புறப்பட்டேன். வரும் வழியில் . கடற்கரை ஒரமே இரண்டு கல் சென்றோம். பல இயந்திரங்கள் இயங்கிக்கொண்டிருந்தன. ஆழ்கடலில் கப்பல் போன்ற ஒன்று காட்சி அளித்தது. அக் காட்சி கப்பல் அன்று எனவும் ஆழ்கடலில் எண்ணெய் எடுக்கும் இடத்தில் உள்ள இயந்திரம் என்றும் கரையில் உள்ள ஆயிரக்கணக்கானகுழாய்க் கிணறுகள் வழி,பொறிகள் அந்த எண்ணெயை எடுக்க அமைக்கப்பெற்றவை என்றும் கூறினர். இந் நாட்டில் இப் பகுதியில் தரைக்கடியிலும், ஆழ்கடலிலும் எண்ணெய் இருப்பதாகவும், அதை எடுத்துச், சேர்த்து, தூய்மைப்படுத்தி, பயன்படுத்துவதாகவும், அதன். அளவு விரிவடைய விரிவடைய உலகச் சந்தையில் எண்ணெய் (Petrolium) விலை குறையத் தொடங்கியுள்ள தெனவும் கூறினர். நான் சென்ற இடத்திலெல்லாம் இந்த இயந்திரப்பண் கடலை ஒட்டி நடந்துக்கொண்டே இருந்தது. அத் தானியங்கிகள் தம் பணியினை இடை,