பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்தமடம்.ஹாவாய் 27-5.85 3 { Ꮜa செய்து வழிபாடாற்றினார். பின் அனைவரும் மடத்துக்குத் திரும்பி வந்தோம். 7-30க்கு உணவுக்கு அழைத்தனர். அட்டிற் சாலையின் பக்கத்தில்தான் நடராசர் திருக் கோயில் இருக்கிறது. எனவே நான் அங்கே சென்றபோது, நடராசருக்கு தனி ஆராதனை செய்து, திருநீறு, சந்தனம், குங்குமம் தந்தனர். இவை அனைத்தும் நல்ல முறையில் செய்யப் பெற்றன அல்ல; கடையில் விலை கொடுத்து வாங்கியவைதான். வெறும் வண்ணம் கலந்த கோதுமை அல்லது மைதா மாவே குங்குமம். சந்தனம் முறையான நிறமும் மணமும் பெறவில்லை. திருநீறும் அப்படியே. நானும் சொக்கலிங்கமும் அவை முறையாக எவ்வாறு அமைய வேண்டும் எனக் கூறினோம். யாரையோ சென்னையில், நம்பி இவர்கள் சொல்ல, அவர்கள் எதையோ வாங்கி அனுப்புகிறார்களாம். உண்மையில் சமயம் இப்படியும் வளருமா என எண்ணிக் கவன்றேன். மஞ்சளிலிருந்து எப்படிக் குங்குமம் எடுக்க வேண்டும்,திருநீறு எவ்வாறு எடுக்க வேண்டும் என்வும் சந்தனம் அரைக்க வேண்டியுள்ளதையும் விளக்கிக் கூறினேன். ஆயினும் அவற்றை முறையாகச் செய்து தர வேண்டுமே எனக் கவன்றேன். எல்லாவற்றி லும் கலப்பு செய்யும் நம் நாகரிகம் இதையும் கலக்கின்றது. இப்படியும் சமயம் வளர்கின்றது. ஆயினும் இவற்றை இவர் களிடம் சொல்ல விரும்பவில்லை. உண்மையில் சமயம் வளரப் பாடுபடும் இவர்கள் நல்ல மனம் துன்பப்படக்கூடாது அல்லவா! . பின் சைவ உணவு படைத்தனர். அது ஆங்கில முறையில் அமைந்தது. எனவே நான் உண்ணவில்லை. எனினும் இங்கே தயார் செய்யும் நல்ல தேனும் பாலும் எனக்கு உணவாயின. இங்கே நல்ல தேன் எடுக்கிறார்கள். சொந்தப் பண்ணை யில் மாடுகள் வளர்த்து, பாலும் நெய்யும் வெண்ணையும் தயிரும் தயாரித்துத் தருகிறார்கள். துறவியரே எல்லாப் பணிகளையும் செய்கின்றனர். உணவுக்குப் பின் ஆறுமுகச் சுவாமி என்கிற துறவியார் என்னுடன் உரையாடிக் கொண்