பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் விரித்தாடும் ஆண் மயிலும் சில பெண் மயில்களும் களி நடம் புரிந்தன. இந்தச் சூழல் உண்மையில் உடலுக்கு ஒய்வும் உரமும் தந்ததோடு உளத்துக்கு உணர்வும் அமைதியும் ஊட்டிற்று. இவற்றில் தோய்ந்து நின்ற என்னைக் குருதேவர் (சுவாமி சுப்பிரமணியா) காண அழைக்கிறார். என்றனர். அவரிடம் சென்று நான் வந்த வகையினையும், நான் சென்னையில் ஆற்றிவரும் பல்வேறு பணிகள் பற்றியும் இங்கே கண்ட பல்கலைக் கழகங்கள் பற்றியும் கூறினேன். சென்னையில் பள்ளியிலே சமயப்பாடம் உண்டா என்றனர். பள்ளிக்குள் கோயிலும் வார வழிபாடும் இசையோடு பாடல் பயிற்றும் முறையும் உண்டு எனச் சொன்னேன். அரை. மணிநேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்து வெளி. வந்தேன். அங்குள்ள துறவியர் தனியாக உட்கார்ந்து சில பொருள்களைப் பற்றிப் பேச விரும்பினர். இங்கே சிலரே உள்ளமையின் வேறு சொற்பொழிவுகளோ பிறவோ வேண்டாமெனவும் கூடியோ தனித்தனியோ சமயம் பற்றிப் பேசலாம் எனவும் முடிவு கொண்டேன். சமயம் பற்றியகோயில்,தேவாரம் பற்றிய என் நூல்களைப் பயின்றதாகவும் அவற்றால் பல உண்மைகள் உணர்ந்ததாகவும் அவர்கள் கூறினர். 12 மணி அளவில் திரு. சொக்கலிங்கம் அவர்கள் பிள்ளைகளுடன் 15 கல் அப்பாலுள்ள நகர் சென்று வரலாம் என்றார். நானும் புறப்பட்டேன். அங்கே உள்ள பெரிய கடைக்குள் நுழைந்தோம். இது மிகச்சிறிய ஊர். சாலைகள் எங்கும் போல அழகாக உள்ளன. இச் சிறு தீவைச் சுற்றிலும் இத்தகைய சாலைகள் உள்ளன என்றும் மக்களும் இந்த ஒரங்களில்தான் வாழ்கிறார்கள் என்றும் தீவு நடுவில் மலைகளும் காடுகளும் உள்ளன என்றும் கூறினர். செல்லு மிடமெல்லாம் பெரிய பெரிய தென்னஞ் சோலைகளும் வாழைச் சோலைகளும் கரும்பு, சோளம், செரி, பழங்கள் விளையும் பெரும் வயல் வெளிகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கே சிறுசிறு நீர் வீழ்ச்சிகளும் இருந்தன. வீடுகள்