பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்த மடம் - ஹாவாய் 29.5.85 385 சைவமாம் சமயம் சாரும் நிலையினையும் விளக்கி உரைத்த னர். இவர்கள் சீடர்கள் அந்த இடங்களிலெல்லாம் இருந்து சமயம் பரப்பும் வழிகளையும் இவர்கள் சைவ சமய வகுப்பு (அஞ்சல் வழி) நடத்துவதையும் கூறி அதற்கு அனுப்பப் பெறும் பாடங்களையும் காட்டினர். நான் சைவ சமய அடிப்படைகளைத் தேவாரம், திருவாசகம் போன்றவற்றி லிருந்து எடுத்துக் காட்டி, இறைவன் ஒப்பற்ற நிலையில் உள்ளமையை விளக்கினேன். இரண்டு மணிக்கு முடிந்து உணவு கொண்டோம். உணவு கொண்டபோது ஆண்மயில் எங்கள் அண்டை யில் வந்து நின்றது. பசி போலும், நாங்கள் உண்டதில் கழிவு இருப்பின் உண்ண வந்தது போலும். நான் அடிகளா ரிடம் சொல்லி வேறு கிண்ணத்தில் உணவு கொண்டு வரச் செய்து ஊட்டினேன். அதற்குள் பெண்மயில் ஒன்றும் வந்தது. இரண்டும் கலந்து உண்டன. ஒன்று உண்ண ஒன்று காணும்; மற்றொன்று உண்ண முன்னது காணும். இரண்டும் கலந்து உண்டும் கலத்தில் சிறிது இருந்தது. குறையவே இல்லை. எனக்குப் பழைய சங்கப் பாடல் நினைவுக்கு வந்தது. ஆண்யானையும் பெண்யானையும் ஒரு தடாகத்தில் - மிகக் குறைந்த அளவில் நீர் இருக்க . உண்ணச் சென்றன. இரண்டும் துதிக்கையை நீட்டித் தண்ணிரில் ஆழ்த்தின. இரண்டும் குடித்தன - ஆனால் நீர் குறையவில்லை - காரணம்? ஆண் குடிக்கட்டும் என்று பெண்ணும், பெண் குடிக்கட்டும் என்று ஆணும் நிற்க . தண்ணிரும் அப்படியே இருந்தது. இதைக் காட்டித் தலைவன் தலைவியர் வாழ வேண்டிய வழியினைச் சுட்டிய புலவரைப் போற்றினேன். இரண்டின் நிலைகண்டு பின் மறுபடியும் சோறும் கறியும் கொண்டு வந்து கலத்தில் பெய்தேன். பின் இரண்டும் விருப்புடன் உண்டு மகிழ்ந்தன. அருணகிரிநாதர் மயில் விருத்தம் வாயில் வந்தது: "இமயகிரி குமரி மகன் ஏறு நிலக்கிரீவ ரத்தனக் கலாப மயிலே' எனப் பாடிற்று. - 25-سخ gr۰