பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அடி உயரம் எழும்பும் ஒரு நீர் உயர் காட்சி வேகமாக இயங்கியது. நெடுந்துாரத்திலிருந்தும் அது தெரிந்தது. பின் பலவிடங்களுக்கும் சென்றோம். 1150 ஆண்டில் கட்டப் பெற்ற பழைய மாதா கோயில் நிமிர்ந்து காட்சியளித்தது. பழங்காலப் பாணியில் கல்லும் மரமும் கொண்டு கட்டப் பெற்ற, பழங்கால உரோமர் கட்டிடக்கலைக்கு நிலைக் களனாக அது நிமிர்ந்து நின்றது. தற்போது அது கதோலிகர் வழிபடு இடமாக உள்ளது. வழியிலே, சென்னையில் பழங்காலத்தில் ஓடியது போன்று, தண்டவாளமிட்ட "டிராம் வண்டிகள் சாலைகளில் ஒடக் சண்டேன். அகன்ற தெருக்களானமையின் அவற்றால் இடர்ப்பாடு இல்லை போலும். (இங்குள்ள பஸ் எல்லாம் பம்பாய் போல, மேலே உள்ள மின்சாரக் கம்பிகளின் உதவியாலேயே இயங்கு கின்றன) வழியிலே பல இடங்களில் பத்திரிகைகள் சிறு மாடங்களில் வைக்கப்பெற்றிருந்தன. அதை விற்க யாரும் இல்லை. தேவையானோர் உரிய காசினை அங்குள்ள பெட்டியில் இட்டு, தேவையான பத்திரிகையினை எடுத்துக் கொள்ளலாம். ஒரு பத்திரிகை குறைந்தது 1 பிராங்கு (5 ரூபாய்). தெருவுதொறும் எண்ணற்ற கார்கள் அலுவலகங் கள் இல்லா இடங்களிலும் நிறுத்தப் பெற்றிருந்தன. இங்கே காருக்கு ஷெட் இருக்கவேண்டிய தேவை இல்லை போலும், 20,25 அடி அகலமுள்ள சிறு தெருக்களிலும் இரு புறங்களி லும் கார்கள் நிற்க, செல்வோர் தம் கார்களை மிக எச்சரிக்கையாக ஒட்டிச் செல்கின்றனர். ஜினிவா பழைய நகரத்தில் கார் புக முடியாத சிறு தெருக்கள்கூட உள்ளன. எனினும் அவற்றிலும் ஆங்காங்கே சில கார்களை நிறுத்தி யுள்ளனர். - ஜினிவாவில் தெருவுதொறும் பெருஞ்சிலைகள் ೧೧)ಹಹಲ பெற்றுள்ளன. பழைய நக்ரில் பழங்காலப் பெருஞ்சிலைகள், பழைய உரோம கிரேக்கப் பாணியில் ஓங்கி நிற்கின்றன. அவ்வப்போது உலகில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளைக் குறிக்க எழுப்பப்பெற்ற சில சின்னங்களும் உள்ளன. மிகப்