பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்த மடம் - ஹாவாய் 29.5.85 387 பின் பள்ளியில் பயிலும் இளம் உள்ளங்களில் சமய உணர்வை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்ந்தோம். சென்னையில் விஸ்வ இந்து பரிட்சத், சின்மயா சங்கம், சங்கரர் மடம் போன்றவை இத் துறையில் சில ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள செயல்களைக் கூறினேன். அவர்களும் அவர்கள் மடத்தைச் சேர்ந்த அன்பர்களும் மெளரிஷியஸ் தீவிலும் மலேயாவிலும் சமயம் வளரச் செய்யும் தொண்டுகள் பற்றி விளக்க உரைத்தார். அவற்றுள் எவ்வெவ்வகையான மாற்றங்கள் செய்யின் பயன் விளையும் எனவும் எண்ணினோம். பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். நான் கொண்டுவந்த சமயம் பற்றிய இரு கட்டுரைகளையும் தந்தேன். பின் சென்னையில் நம் வள்ளியம்மாள் பள்ளி பற்றியும் அதில் பயிலும் பிள்ளைகள் பற்றியும் சமயம் எந்த வகையில் போற்றப்படுகின்றதென்பதையும் விளக்கிக் கூறினேன். சமயம் பற்றி அவர்கள் வெளியிட்ட முதல் நூலை அவர் என்னிடம் தந்து, அதில் உள்ள பொருள்களை நன்கு ஆராய்ந்து, இறுதியில் உள்ள வினாக்களுக்கும் பிள்ளை களை விடை தரச் சொல்லலாம் என்றார். (அதனை நம் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த இராமசேஷன் என்பார் தமிழில் மொழி பெயர்த்துள்ளாராம்) நானும் பல வகையில் முயலலாம் என்று கூறினேன். நீண்ட நேர ஆய்வுக்குப்பின் இருவரும் கலந்து செய்ய வேண்டிய பணி களைப் பற்றியும் ஓரளவு ஆய்ந்து விடைபெற்று அறைக்கு வந்தேன். சிறிதுநேர ஓய்வுக்குப் பின் கதிர் அடிகளார் 8 மணி அளவில் கலந்து பேசலாம் என்றனர். நானும் எட்டுமணி அளவில் சென்று ஒருமணி நேரம் அவர்களுடன் அவர்தம் செயல்கள், அடிப்படைக் கொள்கைகள், சைவம் வளரச் செய்ய வேண்டிய பணிகள் பற்றிப் பேசினேன். விநாயகர் வழிபாடுபற்றிப் பேசியபோது, விநாயகர் வழிபாடு தமிழ் நாட்டில் கி. பி. 7-ம் நூற்றாண்டில் (கி. பி. 642)-ல் சிறுத்