பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் தொண்டரால் (பல்லவன் சேனைத் தலைவர் பரஞ் சோதியார்) வாதாபியிலிருந்து கொண்டுவர, வளர்க்கப் பெற்றதென்ற வரலாற்று உண்மையினைக் கூறினேன். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டாலும், முக்கிய இடத்தை அவர்கள் விநாயகருக்குத் தந்துள்ளமையின் அவர்தம் கருத்துப்படி எங்கேனும் முளைத்து நின்ற நிலையினைக் கொள்ளலாம் என்றனர். நான் மேலும் காலத்தால் பின்பு வந்த ஒரு வழிபாடாயினும், இன்று அந்த விநாயகர் வழிபாடே வீடுதோறும், தெருவுதோறும்; ஊர்தோறும் - பிற தெய்வங்களுக்கு இல்லாத சிறப்போடு நடைபெறுகின்ற தென்பதையும் சுட்டினேன். பிறகு அவர்கள் சைவ சமயத்தவர் கொள்ளவேண்டிய - கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் - வாழ்க்கை முறைகள் முதலியன பற்றிக் கூறினார். நானும் சமய நூல்களிலிருந்து எடுத்துக் காட்டுக்கள். தந்து விளக்கம் தந்தேன். பிறகு அவர்களுக்கு 9 மணிக்குக் கடமை இருந்ததால், செயல்வழிச் சென்றார் கள். இங்கே மடத்தில் 11 துறவியரும் சில முயல்வாரும் இருக்கின்றனர். இரண்டொருவர் புதிதாகச் சேர்ந்திருக்க லாம். தலைவர் சுப்பிரமணியா என்றவர் பெருந்துறவி, அவர்தம் குரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர். அவர்தம் குரு தமிழகத்தைச் சேர்ந்தவர். எனவே இவர்கள் பரம்பரை தமிழகத்திலேயே தொடங்குகின்றது. இங்குள்ள துறவியர் அனைவருமே தலைவர் தவிர - எல்லாப் பணி களையும் செய்கின்றனர். தலைவரும் சில பணிகளைச் செய்கின்றார். சுமார் 50 ஏக்கருக்கு மேலுள்ள நிலங் களைப் பயிரிடுவ்து, அவற்றைச் செம்மைப்படுத்துவது, காப்பது, களஞ்சியம் சேர்ப்பது, விற்பனைக்குத் தருவது அனைத்தையும் செய்யவேண்டும். மடத்தினைச் சுற்றியுள்ள சும்ார் ஐந்து ஏக்கர் நிலத்தில் உள்ள தென்னை, ஆல் போன்ற மரங்களைக் காப்பது, பூஞ்செடிகளை வைப்பது, புல்லை வ்ெட்டித் துப்புரவு செய்வது, மலர் பறித்து மாலை