பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்த மடம் - ஹாவாய் 30.5-85 391 ஏனோ அந்த மயில் என்னிடம் தன்னை ஒப்படைத்தது. நான் மகிழ்ந்தேன். - பின் இறைவனை வணங்கி, அறையில் சில சமய நூல் களைப் படித்துக்கொண்டிருந்தேன். இரண்டு மணி அளவில் காபா (KAPAA) நகர் சென்று பயணச்சீட்டு முதலியன பற்றிக் காண வேண்டியிருந்ததால் தொண்டாற்றும் துறவி ஒருவரோடு சொக்கலிங்கம் உடன்வரப் புறப்பட்டேன். முதலில் அஞ்சலகம் சென்றேன். அதன் செயல்பாட்டின் அவல நிலையை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். இதற்கு முன்னும் சிலவிடங்களில் அஞ்சலகம் சென்றுள்ளேனாயினும் இங்கே உள்ளே சென்றும் கண்டேன். அகன்ற இடம்: நம் நாட்டுப் பெருநகரங்களில்கூட இவ்வளவு வசதி கிடையாது. இது மிகச் சிறிய ஊர் 20,000 மக்கள் இருப்பார்களா என்பது ஐயமே. அதற்கு இத் துணைப் பெரிய அஞ்சல் நிலையமா என வியந்தேன். ஆயினும் அதன் செயல்பாட்டு முறை காண விழைந்தேன். இந்தச் சிறுநகரில் எத்தனை எத்தனை அலுவலகங்கள். ஒரு தனி நாளிதழ். பெருங்கடை கள், பெரிய வங்கிகள் . 20,000க்கு மேற்பட்ட கார்கள். பல கார் நிற்கும் இடங்கள். கார் எண்ணெய்க்குப் பல கடைகள். பரந்த விளையாட்டிடங்கள்: பல பள்ளிகள். எங்கும் தொலைபேசி. இந்த நிலை நம் மாநிலத் தலைநகரங்களில் கூடக் காணமுடியாத ஒன்று. இது நம் நாட்டு ஐந்து அல்லது ஆறாம் நிலையில் வைத்து எண்ணக் கூடிய ஒரு ஊர். திரும்பி வருமுன் வங்கிக்குச் சென்று பணமாற்றம் செய்து கொண்டேன். வங்கியில் பணிபுரியும் பெண்கள் எவ்வளவு அன்புடனும் பரிவுடனும் வருபவரை ஏற்று, உதவி, ஆவன செய்கிறார்கள். அப்பப்பா! நம்நாட்டு வங்கிகளை நினைக்க அழுகையே வந்தது. நம் பள்ளியிலேயே உள்ள வங்கி, ஒரு கடிதத்துக்கு ஒரு வருடமாகியும் - பலமுறை நினைவூட்டியும் பதில் போடாத நிலையினை எண்ணினேன். இவை அனைத்தும் தனியார் நிறுவமாக இருப்பதோடு, பணியாளர் சிறக்கப் பணியாற்றினால்தான் மறுநாள் வாழ்வு