பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்த மடம் - ஹாவாய் 30.5.85 393 பின் ஏழுமணி அளவில், நான் இதுவரையில் காணாத அருட்திரு நடராச அடிகளார் என்பவர் வந்து தம்மை அறிமுகம் செய்து கொண்டார்கள். உயர் நிலையில் துறவு நிலை எய்திய பதினொரு துறவிகள் இங்கே உள்ளதாகவும், ஒவ்வொருவருக்கும் தனித்தனி பணிகள் உள்ளமையாலும், அவர்தம் பணிவழிநின்ற காரணத்தால் கடந்த மூன்று நாட் களிலும் என்னைக் காண முடியவில்லை என்றும் சொன்னார். 'கள். தவம் செய்வார் தம் கருமம் செய்வார்' என்ற வள்ளுவர் வாய் மொழியை நினைத்தேன். பின் அவர்கள் இந்த மடத்தில் உள்ள மூவகை நிலைகளையும் படிப்படியாக உயர் நிலையில் கால்வைக்கும் முறைகள் பற்றியும் விளக்க உரைத்தனர். எங்கும் யாரும் திடீரெனத் துறவியாக முடியாதல்லவா! எந்தனைத் துறவிகள் - எல்லாச் சமயங், களிலும் துறவு நிலையைத் துறந்து இல்லற வாழ்வை மேற் கொள்கின்றனர். பழங்காலத்திலும் நல்ல துறவிகளும். நல்லாசிரியர்களும் வருபவர்களையெல்லாம் மாணவராகவும் தொண்டர்களாகவும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. பலநாள் இருக்கவைத்து சுடச்சுடரும் பொன்போல் ஒளிவீசும் தன்மை கண்டு, தியாக வாழ்வை நினைத்து எண்ணி, பின் தானே. அவர்களை ஏற்றுக் கொள்வர் எனக் கேட்டிருக்கிறோம். இவர்களும் அந்த நிலையில் புதிதாக வருபவரை மூன்றாண்டு கள் தனிநிலையில் விட்டு, செம்மையாயின் மறுபடி மூவாண்டு தந்து, இவ்வாறே 12 ஆண்டுகள் கழித்து, உயர் நிலைத் துறவியாக்குகிறார்களாம். இடையில் திருத்திய நெறிகாணின் அவர்களுக்கு ஒருவகை உடை (மஞ்சள்) தந்து அவர் காலத்துக்குள் நெறி விளக்கமில்லையாயின், அவர் களைத் திரும்பவும், இல்லற வாழ்வுக்குச் செல்லுமாறு ஆணையிடுகின்றனர். வள்ளுவர்காட்டும் கூடா ஒழுக்கம்’ "கூடாவகைக்கு இந் நெறி நல்லதெனவே நான் நினைத்தேன். இங்கே மகளிர் துறவியாகும் நிலை இல்லை. அவர்கள் இல் லறத்திலே இருக்கவேண்டும் என இவர்கள் வற்புறுத்துகின்ற னர். ஆடவரும் துறவுநிலையில்தான் இறைவனை அடைய முடியும் என வற்புறுத்துவதில்லை. ஆடவரும் மகளிரும்