பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்த மடம் - ஹாவாய் 31.5.85 397 எடுக்கும் இயந்திரமும் பிறவும் உள்ளன. குறைந்த ஆள் மட்டுமன்றி குறைந்த இடத்திலேயே இதைத் தொழிற். படுத்தி அதிக வேலை செய்ய முடியும் என அறிந்தேன். நம் நாட்டிலும் இந்த வகையில் அச்சகங்கள் அமையின், அத் துறையில் நிலவும் ஆளில்லாக் குறை நிவர்த்தியாவதோடு, குறைந்த காலத்தில் நிறைந்த விளைவுகளைக் காணலாம். ஆனால் அதற்கு மின்சாரம் ஒத்துழைக்க வேண்டுமே! உழைக் குமா! எல்லாத் துறைகளையும் வளரவிடாது தடுப்பது மின்சாரமல்லவா! அதனாலேயே உற்பத்தி குறைய விலை யும் ஏறுகிறதே. இவற்றையெல்லாம் எண்ணி மக்களை மலரச் செய்வார் யார்? நேற்று சொன்னபடி காலையிலேயே உட்கார்ந்து நடராசர், விநாயகர், முரு க ன், அர்த்தநாரீச்சுரர் ஆகியோருக்கு உரிய இனிய தமிழ்ப் பாடல்களை (தேவாரம் - திருப்புகழ் - செய்யுட்கோவை) எழுதி, அவற்றை ஆங்கிலத்திலே அப்படியே அமைத்து (Transliteration) இருபடிகள் எடுத்துக் கொடுத்தேன்; மகிழ்ந்தனர். நேற்று மாலையே இது பற்றிப் பேசி முடிவு செய்தார்கள் என்றும் உடன் தமிழ்ப் பாடல் பாட ஏற்பாடு செய்யப் பெறும் என்றும் கூறின்ார்கள். அதே நாளில் அவற்றைக் கேட்டேன். இன்று மாலை நடந்த அபிடேக ஆராதனை முடிவில், தீபாராதனை முடிவில், திராவிட வேதம் பாடப் பெறும் என்று சொல்ல. நானும் சொக்கலிங்கத்தின் மகனும் தேவாரப் பாடல்களைப் பாடினோம். பிறகு ஐந்து முகத் தீபாராதனை நடைபெற்றது. தமிழ் இல்லாத ஒரு கோயில் தமிழை. தேவாரப் பாடலை இறைவன் முன் பாடும் நிலை அறிந்து, நான் இங்கே வந்ததன் பயன் இதுவோ என மகிழ்ந்தேன். • பிற்பகல் சோலைகளைச் சுற்றிக் கண்டு, மயிலொடு மகிழ்ந்து சிறிது நேரம் இருந்து உணவு கொண்ட பின் ஒய்வு கொண்டோம். அபிடேகம், 4.30க்கு ஆகையால், அருகில் சலசலத்து ஒடும் கானாற்றில் இறங்கி நீர்கொண்டுவர நானும் ஆறுமுக அடிகளும் சென்றோம். இயற்கைச் சூழலுக்கு