பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் இடையில் அச் சிற்றாறு செல்லுகிறது. அதுதான் இந்தத் தீவின் புனித நதி என்றும் இங்கேதான் தோன்றுகிற தென்றும், இதன் உச்சியில் பண்டைக் காலப் பழங்குடிகள் ஆண்டுக்கு ஒருமுறை விழாவாற்றுவார்களென்றும் கூறினர். பின்னும் வேறு ஏதோ சொன்னார் எனக்குப் புரியவில்லை, தண்ணீர் கொண்டு வரவும் அபிடேகம் தொடங்கவும் சரியாக இருந்தது. குமாரசாமி குருக்கள் அவர்கள் அன்புடனும் பக்தியுடனும் இலிங்கமூர்த்திக்கு அபிடேகம் செய்து, நான்கு மூர்த்திலிங்கங்களுக்கும் உணவு படைத்து தீபாராதனையும் செய்து முடித்தார். முடிவில் நான் மேலே காட்டியபடி தேவாரமும் பாடப் பெற்றது. இனி நடை பெறும் ஒவ்வொரு பூசையிலும் இல்வாறே தேவாரம் பாடப் பெறும் என்றனர். - . வழிபாடு முடிந்து இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு விடுதி திரும்பினேன். அங்கே விமான நிலையத் துக்குச் செல்ல, திரு. சொக்கலிங்கமும் அவர்தம் மக்களும் தயாராக இருந்தனர். அவர் 7மணிக்குப் புறப்பட்டு "ஹானலூலூ வழியாக அமெரிக்க நாட்டிற்குச் (சான்பிரான் சிஸ்கோ) செல்லுகின்றனர். துறவியர் இருவரும் வந்திருந்து வழியனுப்பி வைத்தனர்.பின் விடியல் ஆறு மணிக்கு எனக்கும் 'கார் வரும் என்றும் தயாராக இருக்குமாறும் கூறிச் சென்றனர். இன்று வெள்ளிக்கிழமை - பிரைதோடம் . இம் மே மாதக் கடைசி நாள் - நாளை இருநாளை (முதல் - இரண்டாம் தேதிகள் உலகில் நாள் மாறும் எல்லைவழி நாளை நான் செல்வதால் திடீரென முதல்தேதி இரண்டாம் தேதியாக மாறும்) ஒரே சமயத்தில் கடக்கும் போகும் நிலை இவற்றை எல்லாம் எண்ணிக் கொண்டு இங்கே கழித்த நான்கு நாட்களையும் கடந்த இரண்டு மாதங்களையும் எண்ணி எண்ணி இக் குறிப்பினையும் எழுதி முடித்தேன். குருக்களும் கோயிலுக்குப் பூசை செய்யச் சென்றார். நான் புறப்பட வேண்டியதற்கு ஆயத்தமாக எல்லாவற்றையும் சரிசெய்து, குருக்கள் வந்தபின் உணவு கொண்டு 9மணிக்குப் படுக்கச் சென்றேன்.