பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டோக்கியோ 1.2-6-85 403 அறிந்தேன். டோக்கியோ இரெயில் நிலையத்தில் இறங்கு முன் சுமார் நாற்பது கல் கடந்துவந்தேன். இங்கே வண்டி கள் நம் நாட்டு முறையில் (keep to the lett) ஒடுகின்றன. இங்கேயும் கால்நடைகளும் பிற பொது வாகனங்களும் பிறவும் இல்லை. சாலைகள் செம்மையாகவே உள்ள்ன. எங்கும் பலப்பல புதிய சாலைகள் இரெயில் - சாதாரணப் பாதைகள் - ஆக்கப்பெறுகின்றன. செல்லும் பாதை வழி இருபுறமும் உயரிய மதில் எழுப்பி உள்ளனர்.ஒரே சாலையில் எதிர் எதிராகச் செல்லுபவர் காணா வகையிலும் இடையில் சுவர்கள் எழுப்பப்பெற்றுள்ளன. வழிநெடுக இயற்கைக் காட்சி சிறந்திருந்தது. எங்கும் பசுமை - வயல்கள் நம் நாட்டினைப் போன்று சிறுசிறு பிரிவுகளில் பயிர் செய்யப் பெற்றிருந்தன. பல தொழிற்சாலைகளும் தென்பட்டன. அழகிய வளைந்த மேம்பாலங்கள் பல. ஒரே இடத்தின் மூன்று பாதைகள் கடக்கும் மேம்பாலமும் உண்டு. கடலி லிருந்த கழிகள் ஊர்ப்புறத்திலும் நகரின் நடுவிலும் ஊடுருவிச் செல்ல, அவற்றில் சிலவிடங்களில் படகுகளும் சிலவிடங்களில் கப்பல்களும் செல்லுகின்றன. இங்கும் வானளாவிய 10, 14, 16 அடுக்குக் கட்டடங்கள் உள்ளன. இரெயில் நிலையத்தில் இறங்கி, பக்கத்தில் இருந்த வாடகை மோட்டார் ஒட்டுநரிடம் YMCA செல்லக்கேட் டேன். அவனுக்கு ஒன்றும் புரிய வில்லை. பக்கத்தில் சென்ற ஜப்பானியர் வலிய வந்து நான் தந்த முகவரியை அவனுக்கு விளக்கிச் சொல்லி, அழைத்து செல்லக் கூறி, எனக்கும் வணக்கம் தந்து விடை பெற்றார். ஒட்டுநரும் உடன் என்னை உரிய இடத்தில் விட்டு வாடகை பெற்றுச் சென்றார். எனக்கெனப் பேராசிரியர் காரசிம்மர் அவர் கள்.முன்னரே பதிவு செய்தபடி 630வது அறையில் (6வது மாடி) இடம் பெற்றேன். இன்று ஞாயிறு ஆனமையின் அதிக நெருக்கமில்லை (ஆம் அங்கே சனிக்கிழமை 1-6.85 Ꮿ5fᎢ 6h © 10-45 க்குப் புறப்பட்டு இங்கே ஞாயிறு 2-6-85 மாலை 2க்கு வந்தேன்). -