பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டோக்கியோ 3-6.85 - 407 நான்கு வகை நூல்களைத் தந்தனர். 99.99% வீதம் கல்வி பெற்றுள்ள இந்த நாட்டில் இத்துறையினர் எவ்வாறு செயல் படுகின்றனர் என்பதை அறியவே அவற்றை வாங்கினேன். (முன்னரே துணை இயக்குநர் வேறு இரு நூல்களைத் தந்துள்ளனர்). பிறகு. மணி 1 ஆகவே அருகில் உள்ள, உண்வுச் சாலைக்குச் சென்றோம். அவர் உணவு கொண் டார். ஏனோ எனக்கு இன்று கால் முட்டி நோயும் வயிற்று வலியும் 12 மணி அளவில் தொல்லை தந்தன. சிறிது நேரம் அஞ்சலகத்தில் அப்படியே உட்கார்ந்திருந்து பிறகே புறப் பட்டேன். x - அமெரிக்க நாட்டினைப்போன்று இந்தநாடு அத்துணைச் செல்வமிக்க நாடு அன்று. எனவே இந்நாட்டில் அகநகரி லும் பிற இடங்களிலும் உந்துவண்டிகள் (Bus) பல சென்ற போதிலும், பாதாள இரெயில் பல பகுதிகளுக்குச் சென்ற போதிலும், பலர் சாலைகளில் இருபுறங்களிலும் நடந்தே சென்றதைக் கண்டேன். பாதாள இரெயில்கள் இரண்டாம் போருக்குப்பின்னே போடப்பெற்றனவாம். டோக்கியோ வின் பல பகுதிகளையும் இணைக்கினவாம். இந்த நகரின் நடுத்தர மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்'என்கின்றனர். செல்வவளம் இன்றேனும் வாழ்க்கைத் தரம் ஒன்றும் அந்த நாடுகளுக்குக் குறைவாக இல்லை. பழங்களும் பிற உணவுப் பொருள்களும் அங்கே உள்ளதைக்காட்டிலும் அதிகமாகவே உள்ளன. (YMCA'வில் சற்றே விலை குறைவாக உணவு வழங்குகிறார்கள்.) மேலும் அந்த மேலைநாடுகளைப்போல கண்ட இடங்களில் நடுத் தெருவிலே தின்று கொண்டும் கடித்துக்கொண்டும் பருகிக்கொண்டும் செல்லும் நாகரிகத் தையும் இங்கே காணவில்லை. அந்நாடுகளைப் போல், பெண்கள் அதிகமான பணிகளில் இல்லை எனலாம். பல பணி மனைகளை இன்று சுற்றிக் கண்டதிலும், பல்கலைக் கழக ஆசிரியர் மாணவர்களைக் கண்டதிலும் நான் கண்ட உண்மை இதுவாகும், மாடு, குதிரை, வண்டிகள் கிடையா, ஊர் நெடுகிலும் பலவிடங்களில் புதிய சாலைகளும் இரெயில்