பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் இராமலிங்கர் போன்றார் பற்றிய நூல்களும் இருந்தன. இவர் தம் தமிழ்ப் பற்றே - முன்பின் அறியாத எனக்கு எல்லா உதவிகளும் செய்யத் தூண்டின என எண்ணினேன். மொழி பற்றிப் பல் பேசினோம்; பிறகு தத்துவத்துறையினை யும் வடமொழி துறையினையும் கண்டு வர அனுப்பினர். தத்துவத்துறைப் பேராசிரியர் அவர்களும் என்னை வரவேற்றுத் தம் நூல்நிலையத்தைக் காட்டினார். இந்திய நாட்டு எல்லாத் தத்துவங்களும் சைவசித்தாந்தம் தவிர - அங்கே பயிற்றப் பெறுகின்றன - நூல்கள் உள்ளன. சைவ சித்தாந்தந்தைப்பற்றிக் கவலைப் படுவார் யார்? முன்னரே இது பற்றிக் குறித்துள்ளேன். பேராசிரியருக்கு அது புரியவே யில்லை. நான் விளக்கிச் சொல்லி, வேண்டுமானால் சில ஆங்கில நூல்களை அனுப்ப முயல்வேன் என்று கூறினேன். அவரும் எழுதுவதாகக் கூறினார். என் முகவரியும் தந்தேன். வடமொழிப் பேராசிரியர் (ஜப்பானியர்தாம்) வகுப்புக்குச் சென்றிருந்தார். அவர் நூல் நிலையம் கண்டேன். இராமாயணம், பாரதம், வேதம் போன்றவற்றின் ஆங்கில ஜப்பானிய மொழி பெயர்ப்புகள் இருந்தன. இவற்றைக் காட்டிய மாணவர், பின், தாம் காந்தி அடிகளைப் பற்றி ஆராய்வதாகவும் (எம். ஏ. தேர்விற்கு) அவரைப் பற்றிச் சில தகவல் சொல்ல வேண்டும் எனவும் கேட்டார். சென்னேன். பின் பேராசிரியர் காரசிம்மா அறைக்கு வந்தேன். அவருக்குத் தொடர்ந்து அங்கே வேலை உள்ளதெனக் கூறி, தெருவில் வந்து, வாடகைக் காரினை ஏற்பாடு செய்து, அவனுக்கும் செல்லவேண்டிய இடம் பற்றி விளக்கி, கைகூப்பி வழி அனுப்பினார். அவர் தற்போது பல்கலைக் கழகத் துணைவேந்தருக்கு அணுக்கத் தொண்டராய் - தனி அலுவலருக்கும் மேற்பட்டவராய் உதவி புரிகிறார். அடுத்த சூலையில் சென்னை வரும்போது பள்ளிக்கு வருவதாகவும் சொன்னார். தேவையானவற்றைத் தொலைபேசியில் சொல்லச் சொன்னார். அவரிடம் விடைபெற்று வந்து எட்டு மணி அளவில் ரொட்டி, ஐஸ்கிரீம், பிஸ்கட் உண்டு இந்தக் குறிப்பினையும் எழுதி முடித்து 9.30க்கு உறங்கச்சென்றேன்.