பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் நேற்று அதிட்ட அன்னை கோயிலைக் கண்டேன். (Goddess of Fortune) இன்று அன்புக்கன்னைக் கோயிலைக் கண்டேன் (Goddess of mercy). பழமையோடு புதுமையும் விரவியநிலை அங்கே குடி கொண்டிருந்தது. இந் நாட்டின் சமயம் பெளத்தமாயினும் ஷண்டோ சமயமே பழம் சமயமாகவும் இன்றும் பலரால் கொள்ளப்ப்டும் சமயமாகவும் உள்ளதாம். அக் கோயிலில் பசுமரத்தடியில், நம் நாட்டில் ஒலைச் சுவடிகளில் எழுதுவது போன்று மரங்களை மெல்லியனவாக்கி அவற்றில் இந்நாட்டு மொழியில் பலவற்றை எழுதித் தொங்க விட்டிருந்தனர். அக்கோயில் 175 ஏக்கர் பரந்த நிலப்பரப்பில் சோலைகளுக்கு நடுவில் அமைந்திருந்தது. இச் சமயம் இயற்கையின் அடிப்படையில் அமைந்ததாம். அத் தெய்வம் உள்ள கோயில் ஒன்றினையும் சென்று கண்டோம், பெளத்த சமயத்தைப் போன்றே கோயிலில் மூர்த்தி இல்லை. வாயில் காவலர் இருந்தனர் (துவாரபாலகர்). பெளத்தர் கோயில்களிலும் தூவாரபாலகர் உள்ளனர் தெய்வங்களி லெல்லாம் அன்னை யராகவே உள்ளனர். ஒரு கோயில் 8-ம் நூற்றாண்டில் கட்டப் பெற்றதாம். ஒரு கோயிலில் கோபுரத்தில் ஐந்து நிலைகள் இருந்தன. அந்த ஐந்தும் மண், நீர், நெருப்பு, காற்று, விண் ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கும் என்றனர். நிலம் நீர் தீ வளி விசும்பு என்றைந்: தின் திறம் உள்ளானை' என்று நம் அடியவர் பாடிய பாடல்கள் நினைவுக்கு வந்தன. . ஒரு பெரிய இரும்புக் கோபுரத்தின் மேல் ஏற வைத்தனர். அதன் உயரம் 1092 அடி ஆனாலும் 500 அடிதான் ஏறி னோம். சுற்றிக் கண்டோம். அமெரிக்க நாட்டு உயர் மாடங்களுக்கும் கூடம்புகளுக்கும் பாரிஸ் நகர் இரும்புக் கோபுரத்துக்கும் இது இணையாகாது. 13ம் நூற்றாண்டில் இப் பகுதி ரோம் நாட்டுக் கீழைச்சாம்ராஜ்யம்' என அழைக் கப் பெற்றதாக அவர் கூறினார். அது வ்ரலாற்றாளரிடம் கேட்டு அறிய வேண்டிய ஒன்றாகும். பல பெருங் கட்டிடங் களையும் பெரும் பூங்காக்களையும் காட்டினர். பலவிடங்