பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டோக்கியோ 4-6-85 - 415 கள் இளங் காதலர் உலவுவதற்கெனவே அமைக்கப்பட்ட னவெனவும் கூறினார். பெரிய நூல் நிலையத்தே (National Library) 2,100,100 நூல்கள் உள்ளனவாம். இந்திய நாட்டு மொழிகளில் (தமிழ் உட்பட) நூல்கள் உள்ளனவாம். இந்த நாட்டு அதி உயர் நீதிமன்றத்தினை (Supreme Court)யும் கண்டோம். இங்கே பல பெரிய ஒட்டல்கள் உள்ளன. நாளுக்கு 100 டாலர்கள் (ரூ. 1200) வாங்குவன உண்டாம். ஒரு ஒட்டல் (New Olionic) 2000 அறைகள் கொண்டு பரந்த நிலப்பரப்பில் உள்ளமை கண்டோம். இன்னும் இது போன்ற விடுதிகள் பல. . வழியிடை முத் து க் குளித்தெடுக்கும் . தூய்மைப் படுத்தும் அலுவலகம் சென்றோம். இந்நாட்டில் இது பெருங்கலை போலும். சாதாரணச் சிப்பியிலிருந்து எப்படி முத்து உண்டாகிறது? அதை எப்படி எடுப்பது? என்பன வற்றையெல்லாம் காட்டினர். சங்கிடை முத்துப் பிறப்பதை யும் காட்டினர். கத்தும் தரங்கம் எடுத்தெறியும் சங்கின் முத்து'என்ற பழம் பாடல் நினைவுக்கு வந்தது.உயர்ந்ததான முத்துக்கள் பலபல அளவில் இருந்தன. ஒரு அங்குல் விட்ட முள்ள முத்தும் இருந்தது. ஆயினும் விலைகள் அதிகம் - பல ஆயிரம். எல்லாமே நல்ல முத்துக்களாண்மையின் விலைகள் அதிகம். NADE' என்ற சிப்பியில் இருந்து நல்ல முத்து கிடைக்குமாம். காணச் சென்றவருக்கு எண் தந்தனர். 8 'எண்ணுக்கு முதல் பரிசு, ஒரு முத்து. 5000 எண் (250 ரூபாய்) பெருமான முத்தை அளித்தனர். இந்த நாட்டிற்கு 8: அதிஷ்ட எண்ணாம். 4'ம்6ம் 9ம் கெட்ட எண்களாம். விமானத்தில் கூட உட்கார 4(D)6(H) 9(1) கிடையாது. பின் வேறுசில கோயில்களையும் காட்டினர், புத்தர் சாம்பல் புதைத்த இடத்தினையும் அதன்மேல் எழுந்த கோயிலையும் பிறவற்றையும் கண்டோம். எங்களுக்கு வழி யில் இடையிடையே சில ஜப்பான் சொற்களைக் கற்றுத் தந்தார். கூலா (KULA) என்றால் எவ்வளவு (How much) (KARAl) காரை என்றால் அதிகம் (Too much) என்று சொல்லித் தந்தார். இன்னும் பல சொற்கள்.