பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் t பின் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களைக் கண்டோம். ஒவ்வொரு பகுதியினையும் நுழைந்து பார்த் தோம். 50% அளவில் அரசாங்க பொது மக்கள் கலந்த உடைமையாம். பொது மக்களையும் பள்ளிப் பிள்ளைகளை யும் காண'விடுகின்றனர். பல தொலைக்காட்சிகள் எடுக்கப் பெற்றின. இவ்விரண்டிலும் இந்நாட்டு மொழியே இடம் பெறுமாம்,எப்போதோ சில சமயங்களில் ஆங்கில நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றனர். அழகிய ஆறடுக்கு மாளிகையில் இந்த நிலையம் அம்ைந்துள்ளது. தொலைக்காட்சி ஏழு குழாய்கள் வழியாக அனுப்பப் பெறுவதாகவும் அவற்றுள் இரண்டு கல்வி பற்றியே உள்ளதாகவும் கூறினர். பல Guogišissol_Geir augs außGGItih. “Departmental Store" | எனப் பல உண்டு என்றார். அவை அரசாங்கக் கடைகளா என்றேன். அவர் சிரித்தார். இந் நாட்டில் அரசாங்கம் வாணிபம் செய்யாது: ஆனால் விலைகளை உயர விடாது என்றார். இப்பெருங்கடைகளெல்லாம் விடுமுறை நாட்களில் (ஞாயிறு உட்பட) திறந்திருக்கும் என்றும் அன்று மக்கள் பலரும் அங்கே கூடுவார்களானமையின் எந்த வாகனமும் அந்த வழியாகச் செல்ல அனுமதிக்கப்படமாட்டா என்றும் கூறினார். மக்கள் அந்த நாட்களை விழா நாட்களைப் போலவே தெருக்களில் ஆடியும் பாடியும் மகிழ்ந்து, வீட்டிற் குத் தேவையானவற்றையும் வாங்கிக் கொண்டு செல்வர். என்று கூறினார். பல தெருக்கள் . மேலும் கீழும் வளைந்த நெளிந்த பாலங்கள் - கடந்தோம். கடைசியாக் ஒரு கிராம வீட்டிற்கு வந்தோம் அங்கே ஜப்பானின் பழைய பண்பினைக் காண முடிந்தது. கிராம வீடு மரத்தால் ஆனது. யாரும் வாயிற்படி தாண்டி காலில் செருப்பு - பூட்ஸ்சு அணிந்துசெல்லலாகாது. உள்ளறையில் கோரைப்பாய் விரித்திருந்தது. எங்களுக் கெல்லாம் தேநீர் தந்தனர். கீழே தரையில் தடுக்கு இட உட்கார்ந்து எதிரிலுள்ள சிறு பலகைமேல் வைத்தே சாப்பிட்டோம். குழந்தைகளை இட 'சிறு தொட்டில் கள், சாமான்கள் வைக்க உயர் ஊஞ்சல்கள் இருந்தன.