பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டோக்கியோ 3.6-85 417 அறைகள் கீழ் - மேல் இருமாடங்களிலும் தூய்மையாக வும் பொருள்கள் செம்மையாகவும் வைக்கப் பெற்றிருந் தன. பண்டைய ஜப்பானிய மக்கள் விருந்தோம்பும் முறை யும் வாழ்வியலும் நன்கு விளக்கப் பெற்ற அந்த வீட்டினைக் கண்ட உணர்வுடனேயே நாங்கள் விடுதிக்குத் திரும்பிளுேம். இந் நகர் எல்லையில் 1970க்குப் பின் தற்போதுதான் (மார்ச் 17 தொடங்கி செப்டம்பர் முடிய) உலக பொருட் காட்சி நடைபெறுகிறது. (EXB0) ஆயினும் அதுபற்றி இங்கே யாரும் கவலைப்படவில்லை. யாரும் வெளிநாட்டு மக்களும் அதற்கென அதிகமாக வரவும் இல்லை, சாதாரணமாக வரும் யாத்தியகர் கூட்டமே இப்போது குறைவு என்றனர். நான் சிலரிடம் கேட்டேன் அங்கே லாஸ்ஏஞ்சலசில் டிஸ்டினி லேண்டு பார்த்தபின் இதைப் பார்க்க வேண்டுவதில்லை. என்றனர். அறிவியல் முன்னேற்ற அடிப்டைடியில்-நுண் அணு Electronic, ஆய்வு நெறி வளர்ச்சியில் அமைந்த காட்சி அது என்றும் பெரும் பகுதி மக்கள் விளையாட்டு, வேடிக்கை களுக்கே உரிய இடமென்றும் கூறினர். நான் நாளை ஒரு வேளை தங்கி வேண்டுமாயினும் கண்டு செல்லலாம் என எண்ணினேன். ஆயினும் பயணச்சீட்டு மாற்ற வேண்டி வருமாதலாலும் யாரும் அதற்கு முக்கியத்துவம் தராத காரணத்தாலும் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். விடுதிக்கு வந்து சற்றே சோர்வாயிருந்தமையால் ஒய்வு கொண்டு, இந்தக் குறிப்பினை எழுதி முடித்தேன். இங்கே "YMCA'ல் நடைபெறும் ஆங்கிலப் பள்ளியினைப் பார்த்தேன். பெரியவர்களுக்கென ஆங்கிலம் பயிற்றும் பள்ளி வரையறுத்த பாடத் திட்டங்களோடு, சிறந்த முறையில் நடைபெறு கின்றது. முதியோர் ஆங்கிலம் அறிய நல்ல வாய்ப்பு, இங்குள்ளவர்களே ஆசிரியராக உள்ளனர். இவ்வாறு கடந்த நாட்களில் உலகின் கீழைக் கோடியில் நாள் காணும் நல்ல நாட்டின் தலைநகரினைக் கண்ட மனநிறைவில் இரவு உணவு உண்டு படுக்கச் சென்றேன். காலை 6மணிக்கே புறப்படவேண்டும். - - @rー27