பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்காங் 5.6.85 டோக்கியோவில் காலை 4மணிக்கே காலைக்கடன்களை முடித்துக் கொண்டு ஆறு மணிக்கே புறப்படத் தயாரானேன். எனினும் "EXBO வைக் காணலாமா என்ற எண்ணம் தோன்றிற்று. நேராக நகரில் உள்ள விமானப் பண்மனை சென்றேன். அங்கே ஒரு சிலரை விசாரித்தேன். யாரும் அது தரம் உயர்ந்ததென்றோ பார்க்கக் கூடிய ஒன்று என்றோ சொல்லவில்லை. பயண ச் சீ ட் டு வழங்குபவரிடமும் விசாரித்தேன். அமெரிக்க நாட்டில் பலவகை நுண்ணணு ஆய்வினையும் தொழிற்சாலைகளையும் கண்டவர்களுக்கு இது ஒன்றும் புதியது அன்று எனவும், எல்லாவற்றையும் ஒரு சேரக் காண்பதன்றி வேறு சிறப்பு இல்லை எனவும், மக்கள். யாருமே இப்போது அதுகுறித்து, வெளிநாட்டிலிருந்து வரவில்லை எனவும் பெரும்பாலும் பிள்ளை விளையாட்டுப் பெருந்திடல் (Greater America என்ற விளையாட்டிடம்) என்றும் கூறினர். எனவே நான் செல்லவேண்டும் என்ற ஆசையை விட்டேன். அப்படியே சென்றாலும் நான் முன் ஒருமுறை கூறியபடி, எனக்கு அந்த அறிவியல் வளர்ச்சியின் நுணுக்கங்கள் எங்கே தெரியப் போகின்றது. நம் சென்னை யில் ஆண்டு தோறும் நடைபெறும் பொருட்காட்சியினும் அளவில் பெரியதாய் - உலக நாடுகளின் கடைகள் பல உடையதாய் - சற்றே அறிவியல் வளர்ச்சியினை அதிகமாக விளக்கிக் காட்டுவதாய் அமைந்திருக்கும் என்ற முடிவில், குறித்தபடி என் பயணத்தை மேற் கொள்ள முயன்றேன்.