பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்காங் 5.9.85 419 அதிகம் நடக்க முடியாமல் உட்ல் நலமும் சரி இன்மையால் குறித்தபடி புறப்பட்டேன். இங்கே நகர் நடுவிலேயே விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். எல்லா விமானப் போக்குவரத் துக்கும் (இந்தியா உட்பட ARINDIA) இங்கே வசதி உண்டு. இது போன்ற நிலை வேறு எங்கும் எந்த நாட்டிலும் காண வில்லை; எனக்கு இது பெரிய அதிசயமாக இருந்தது. நான் என் சாமான்களை இங்கேயே பதிவு செய்து, உந்து வண்டியில் புறப்பட்டேன். 7.30க்கு விமான நிலையம் வந்து சேர்ந்தேன். உந்து வண்டி நான்கைந்து கல்தூரம் மேல் இரண்டாம் மாடிப்பாலத்தின் மேலேயே வந்தது. புறப்பட்ட இடமும் அப்படியே இருபுறமும் உயர் மதில்கள் - வெளியே இன்ன உள்ள்ன என்று தெரியாது. ஒரு வேளை வெளி நாட்டார் கண்படக் கூடாது என்று அப்படி அமைத்துள்ளார் களோ என எண்ணினேன். பலப்பல சிறுசிறு தொழிற் கட்டடங்கள் தெரிந்தன. வழியில் நான்கு இடங்களில் 'டோல்கேட் எனும் பாதைச் சுங்கவரி வாங்கிவிட்டனர். ஒரே வண்டி எத்தனை முறை. சென்றாலும் திரும்பினாலும் ஒவ்வொருமுறைக்கும் வரிகட்டவேண்டும்.இந்த நிலை சற்றே எனக்கு அதிகமாகப்பட்டது. நம் நாட்டில் ஒரு நாளைக்கு ஒருமுறை கட்டினால் போதும். முப்பது கல்லுக்குள் நான்கு முறை (ஒருமுறைக்குக் குறைந்தது 200என்- 10ருபாய் - வாங்குகிறார்கள் என்றால், ஒருமுறை விமான நிலையம் சென்று வர 80ரூபாய் அ த ற் கே செலவாகும்) இது அதிகம் தானே. ஆயினும் அனைத்தும் அரசாங்கமே மேற் கொண்டுள்ள காரணத்தாலும் வருவாய் அத்தனை யும் சாலை வளர்ச்சிக்கே பயன்படுவதாலும் மக்கள் விருப்போடு தருகின்றனர் என அறிந்தேன். உயரிய பாலம் கீழே இரு பாதைகள் இப்படித் தொடர்ந்து ஐந்து கல் தொலைவு. இதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அரசாங்கமும் பொது மக்களும் 50% 50% விதம் இட்டு, எல்லாத் துறைகளையும் இயக்குகின்றனர்.