பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்காங் 5.6.85' e 42. (Balcony) காய வைகின்றனர். துவைக்கும் காயவைக்கும் மின்சாரப் பெட்டியினை (நம் நாட்டினைப் போன்று) பலர் அறியார். பம்பாய்போன்ற நகரங்களில் மாடி அடுக்களில் ஆடைகள் காய்வதுபோல இங்கும் காய்வதைப் பலவிடங் களில் கண்டேன். குளியல்கூடத் தொட்டிக் குளியல் போன்ற நிலை இல்லை. YMCA போன்ற உயரிடத்தி லேயேயும் தொட்டிக் குளியல் இல்லை. பொழிவு (Shower)க் குளியலும் உண்டு. ஆயினும் பலர் குழாய்க்கடியிலிருந்து நீர் வாளியில் தண்ணீர் பிடித்து வைத்து, மணை இட்டு உட்கார்ந்து கொண்டு குளிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை YMCA'விலேயே கண்டேன். பொதுவாக மக்கள் வாழ்க்கைத்தரம் அவ்வளவு உயர்வாக இல்லையாயினும் நாட்டுப் பற்றுடன் நாட்டு முன்னேற்றத் திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அனைவரும் அயராது பாடுபடுகின்றனர். சுரண்டல், ஏமாற்றல் இல்லை என இவர்கள் பெருமைப்படுகிறார்கள். சமயப்பொறை உண்டு: சுற்றம் தழுவலும் மற்றவர் போற்றலும் உண்டு. இவர்தம் இத்தகைய நல்ல பண்புகளே மிகச் சிறிய நாடாயினும் உலகில் முதலிடத்தில் இதன் வாழ்வை உயரவைக்கின்றன. டோக்கியோ நகர் முழுதுமே தூய்மையாக உள்ளது. தெருக்கடைகள் கிடையா தெருவில் கண்டபடி நடக்கும் மக்கள் கூட்டடமும் இல்லை. ஒருவரை ஒருவர் காணும் போதும் நாம் அப்படியா ஹோ ஹோ என்பது போல இவர்கள் ஹோ, ஹோ' என்கிறனர். அமெரிக்கர் உம், உம்' என்பர். இருநாட்டவரும் அறியாதவர்களாயினும் வழியிடைக் கண்டால் இந்த முறையில் வாழ்த்திச் செல்வதை வழக்க மாகக் கொண்டுள்ள்னர். இந்நாட்டு மக்கள் பழக்கவழக்கங் களும் உடை முதலியனவும் பெரும்பாலும் மேலை நாட்டு மக்களுடையதை ஒத்ததாக இருப்பினும், வாழ்வு முறை முதலியவற்றால் முற்றிலும் கீழ் நாட்டு மக்களை ஒத்தே காண்கின்றனர். • விமானத்தில் நல்ல வகையில் மரக்கறி உணவு தந்தனர். விமானம் சரியாக 1-30 (ஆங்காங் நேரம் டோக்கியோ