பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள். நேரத்துக்கு ஒருமணி நேரம் பிந்தியது) இறங்கியது. நான் யாரையும் எதிர் பார்க்கவில்லை. அங்கேயே நாணயம் மற்றிக் கொண்டு, திரு. சொங்கலிங்கம் கொடுத்த இருவருக் கும் தொலைபேசியில் பேசினேன். திரு. அருணாசலம் கிடைக்கவில்லை. திரு. குமரப்பன் அவர்கள் என்னை நேராக அருகில் உள்ள இண்டர் நேஷனல் ஒட்டலுக்கு" .ெ ச ல் லு மாறு சொல்லி) அங்கே 5.30க்கு வந்து காண்பதாகச் சொன்னார். நான் உடனே வாடகை வண்டி ar(93.3% Gororó (International Hotel) cojójá. சென்றேன். முதன் முதல் எனக்குப் புதிவு செய்து வைத்த இடம் அது ஒரு நாளைக்கு அமெரிக்க் டாலர் 55 ஆகியது (இந்த ஊர் டாலர் 391) நம் ஊர் ரூபாய் 791 (340+10% 5%) இங்கே அறையில் (பெரிய அறை)யில் ஒய்வு கொண் டேன். குமரப்பன் அவர்கள் 5.30க்கு வந்து சேர்ந்தார். அவர் அரசாங்கத்தில் (P.W.G) பணியாற்றுகின்றவராம்: சிறந்த பொறியானர். * . அவருடன் கடைத் தெருப்பக்கம் சென்றேன். விடுதி பெரும் கடைத் தெரு நடுவில்தான் உள்ளது. துணிகள் மிக மிக மலிவாக உள்ளன. என் கைப் பெட்டி கிழிந்துவிட்ட தால், உடன் வேறொன்று வாங்கினேன். பலகடைகளில் நுழைந்து, பல பொருள்களைப் பற்றி விசாரித்தோம். தொலைக்காட்சி, இரண்டும் ஒன்று, வானொலி, புகைப் படக்கருவி, அழுக்குத் தூய்மைப்பொட்டி, பிற நுண் அணுவால் ஆக்கப் பெற்ற பொருள்கள் அனைத்தும் சற்றே விலை குறைந்தே காணப்பெற்றன. துணிகள் மிக மலிவு. அதிலும் தைத்த ஆடைகள் மிகக் குறைவு. சிங்கப்பூரிலும் இதே விலைக்குத்தான் கிடைக்கும் என்றனர். இரண்டிடத் தும் எந்தப் பொருளுக்கும் வரி இல்லையாதலால் விலை குறைவே. எனினும் உணவுப் பொருள்களும், வீட்டுவாடகை யும் மிகமிக அதிகமாம். எனவே மக்கள் மிச்சப்படுத்துவது சற்றே கடினம் போலும், நம்நாட்டு உணவுக் கடையும் இரண்டொன்று இங்கே இருப்பதாகக் கூறி ஓரிடத்திற்கு என்னை அழைத்துச் சென்று விட்டு, அவர் வீடு சென்றார்.