பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்காங் 6.6.85 . 329 இன்று முழுதும் மேக மூட்டம் இருந்தது. சிறு தூறலும் இருந்தது. அன்பர் வீட்டிற்கு நான் காலை 8மணி அளவில் சென்று. சேர்ந்தேன். வாடகைவண்டி ஒட்டுநர் படங்களைப் பார்த்தே இடத்தைக் கண்டுபிடித்தார். எ த ற் கு ம், மேலை நாடுகள் போன்று, தெருப் பெயர் - வீட்டு எண்கள் உட்பட, படங்கள் இருப்பதால் யாருக்கும் இடம் காணல் எளிதாக முடிகிறது. 8மணிக்கு அவர்தம் துணைவியாரும் அவரும் வரவேற்றனர். காலை 8.30 அளவில் சிற்றுண்டி கொண்டு, அவர் அலுவலகம் (9 மணிக்கு) செல்லப் புறப் படும்போது நானும் புறப்பட்டேன். இன்று நான் என்னென்ன காணவேண்டும்; எங்கெங்கு எவ்வெவ்வாறு செல்லவேண்டும் என்பன போன்ற குறிப்பு அனைத்தையும் தந்தார் முதலில் பெருங் கடற்பூங்கா (Ocean Park) சென்றேன். இரு உந்து வண்டிகள் மாறி 9.30க்குச் சென்றேன். அது மிக அழகான இடமென்றும் கட்டாயம் காணவேண்டியதென்றும் கூறினர். எனவே நான் சென்றேன். உள்நுழைய 70 டாலர் (சுமார் 125 ரூபாய்) ஆனால் உள்ளே சென்ற பின் ஏன் வந்தோம் என ஆயிற்று. குளிக்கும் குளங்களும் - பிள்ளை விளையாட்டிடங்களும், மின் பண்ணையும், ஒரிடத்தில் டால்பின் காட்சியும் இருந்தன. பெண்கள் தம்மை மறந்து-பெரு நிர்வாணமாக நீச்சலடிக்கும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார் பலர். ஏறக் குறைய இதே அளவு நுழைவு கட்டணம் செலுத்திய லாஸ் ஏஞ்சலஸ் - டிஸ்டினிலேண்டு காட்சியில் நூறில் ஒரு பகுதிகூட இல்லை. ஆயிரம் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கிறார்கள். பல வெளிநாட்டு மக்கள் இது ஏதோ பெரிய காட்சி இடம் என எண்ணி ஏமாறுகின்றனர். மலை மேல் மின் கம்பிவழி சென்று மற்றொரு மலை அடைந்து பல விளையாடல்கள் காணலாம். அவ்வளவ்ே - நான் விரைவில் வெளியே வந்தேன். டர்ல்பின்' காட்சியும் நான் நியாகாரா வீழ்ச்சியில் கண்டதில் 10-ல் ஒரு பகுதியே. யாகும.