பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்காங் 6-6.85 431 உள்ள பிணைப்பு அதை மெல்லக் கீழே தள்ள உதவுகிறது, மேல் செல்வதற்கும் அப்படியே. அதில் இறங்கிக் கீழ்த்தளம் வந்தேன். பக்கத்திலேயே அன்பர்தம் அலுவலகம் இருந் தது. (நம் நாட்டுப் பொதுப்பணித்துறை .-P. W. D. போன்றது) இவ்வூர்க் கட்டடங்களில் வரைப்படங்கள்: அனைத்தும் இங்கே அனுப்பி, இசைவு பெற்ற பிறகே கட்ட வேண்டுமாம். இசைவு பெறாத கட்டடங்களே இரா என்கின்றனர். அலுவலகம் பொதுமக்கள் தொடர்புடைய தாதலால் மக்கள் வந்தும் சென்றும் நின்றும் இருந்தனர். நான் அவர் அறைக்குச் சென்றேன். மாலை 5 மணிக்குமேல் அவருடன் பல கடைகளுக்குச் சென்றேன். நேற்று கடலில் மறுபக்கம் கண்டமை போன்று பல பெருங் கடைகள் இருந்தன. சிலவற்றின் உள்ளே நுழைந்தோம். பல பொருள்கள் நம் நாட்டு விலைகளைக் காட்டிலும் மிகக் குறைவாகவே உள்ளன. பலவிடங்களைக் கண்டு உந்து வண்டி ஏறி 7மணி அளவில் வீடு வந்து சேர்ந்தோம். சற்றே ஓய்வு தேவையாக இருந்தது. இரு நாள் கடும் அலைச்சல்-நடை என்னைத் திணற வைத்தது. இரண்டு மாதங்களாகக் காரிலேயே சுற்றிச் சோம்பேறியான நான், கடந்த நான்கு நாட்களாக அதிக நடை மேற் கொள்ளவே தொல்லை நேர்ந்தது. எனவே மேலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அன்பர். தம் நண்பர் - இவ்வூர்த் தமிழ்ச் சங்கத்தலைவர் வந்தார்; சுந்தரம் என்பவர். அவர் கோவையில் வேதபுரி யிடம் பயின்றவராம். நம்நாட்டு அரசியலை அலசினார். இங்கே தமிழ்ச் சங்கத்தில் கீழைக்கரை, நாகை வாழ் முகமதியர்களே அதிகம் உள்ளனராம், எனினும் தமிழுக்கு என இவர்கள் ஒன்றும் செய்வதில்லை. கூடி உல்லாச உலா செல்வார்களாம்; அவ்வளவே. நெடுநேரம் பேசிக் கொண் டிருந்தார். பின் உணவு உண்டு அவர் செல்ல, நான் சென்றேன்.