பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலாலம்பூர் 7.6.85 விடியற்காலை 4 மணிக்கே எழுந்து காலைக் கடன் களை முடித்துக் கொண்டு இந்த நாட்குறிப்பை 7 மணி அளவில் எழுதி முடித்தேன். இனி பிற்பகல் 3மணி அளவில் தான் விமானம். எனினும் எங்கும் வெளியில் செல்லவில்லை. முடியவும் முடியாது. 12மணி அளவில் வாடகை வண்டியில் சிறிது தூரம் சென்று, பின் உந்து வண்டியில் ஏறி, பிற்பகல் 2.30க்கு விமான நிலையம் சேர வேண்டும். ஆங்காங் பகுதியின் கல்வி முறை பற்றியும் சிறிது காண வேண்டும். ஆங்கில ஆட்சியில் இது உள்ளமையின் அவர்கள் காலத்தில் நம் நாட்டிலிருந்த முறையே இங்கும் கையாளப் பெற்றது. ஐந்தாம் வகுப்பு - பிறகு உயர்நிலை - Form Vl form-பிறகு கேம்பிரிஸ் கல்வி முறை - இங்கேயும் ஒரு பல்கலைக்கழகம் உண்டு. எனினும் அவ்வளவு சிறந்ததாக இல்லை என்று கூறுகின்றனர். நம் நாட்டைப் போன்றே இங்கே அரசாங்கக் கல்விக் கூடங்களும் உண்டு: தனியார் நடத்தும் பள்ளிகளும் உண்டு. எங்கும் போன்று தனியார் பள்ளிகளில் நல்ல தரம் உண்டு என்கின்றனர். சம்பள்ம் அதிகமாக இருந்தாலும் அவற்றில் சேர்க்க நம் நாட் டினைப் போல் - இங்கும் மக்கள் போார்வம் காட்டுகின்றனர். தமிழர் சிலராயினும் அவர்கள் தம் பிள்ளைகளைக் கல்வி பயிலத் தாயகமே அனுப்புகின்றனர். ஏனோ என்றால் சரியானபதில் இல்லை.