பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் யிலோ பெருமழை பெய்ய ஆரம்பித்து விட்டது. குடை எடுத்துக் கொண்டு வெளியே சென்று - பாதி நனைந்து . ஒரு வாடகை வண்டி கொண்டு வந்து,விமான நிலையம் செல்லும் உந்து வண்டி நிலையம் வரை சென்று, பின் இரண்டு மணிக்கு விமான நிலையம் வந்து சேர்ந்தேன் முழுதும் நனைந்தேன். என் பயணத் தொடக்கத்தே பாரிசிலும் இலண்டனிலும் நனைந்த நான், பயண முடிவிலும் நனைய நேர்ந்ததை நினைத்தேன்-இயற்கை அன்னை வழி இறைவன் என்னைத் தாலாட்டி நீராட்டி அழைத்து வருகின்றாள் என நினைத்தேன். சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே' என்ற தாயுமானவர் அடி நினைவுக்கு வந்தது. கொண்டு வந்த மருந்தில் ஒன்றை (நோவல்ஜீன்) சூடான காப்பியுடன் உண்டேன். சோர்வு நீங்கிற்று. விமானத்துக்குச் செல்லுவதற்கென எல்லா ஏற்பாடுகளையும் முடித்து, 3.15க்கு உள்சென்றேன். விமானம் 3.45க்கு புறப்பட்டது - ஆம்! கொட்டுமழைக்கு நடுவில்தான். என் ஆடைகளும் மெல்ல உலர ஆரம்பித்தன. விமானப் பணியாளர் என்னிடம் மிக அன்பாக இருந்து வேண்டிய உதவிகளைச் செய்தனர். நல்ல சைவ உணவு தந்தனர் . இரண்டு மூன்று முறை பழரசம் தந்தனர். என் முகத்தின் ேச ா ர் வு கண்டோ - ஏனோ - அவர்கள் அனைவரும் பிற பயணிகளைக் காட்டிலும் என்னிடம் பரிவு 'காட்டினர். விமானம் சரியாக 7மணிக்குக் கோலாலம்பூர் நிலையம் வந்தது. நான் 1948ல் வந்தபோது இங்கே விமானப் போக்குவரத்து கிடையாது. பல்கலைக் கழகம் இல்லை. இன்று எல்லா நலமும் பொருந்தி மிக வளர்ந்து சிறந்துள்ளது. இந்நாட்டு மக்களாகிய மலாய்க்காரரும் பல இடங்களில் சிறக்கப் பணியாற்றி, நாட்டு நலம் காணப் பாடு படுகின்றனர். த்மிழர் வாழ்வுதான் நான் முன் கண்ட நிலையிலும் சற்றே தாழ்ந்திருக்கலாம். இவற்றையெல்லாம் எண்ணிக் கொண்டு, விமானநிலையச் சடங்குகளையெல் லாம் முடித்து வெளியே வந்தேன். டாக்டர். தண்டாயுதம் திரு. இலக்குமணன் செட்டியார் மற்றொரு ஆசிரியர் நண்பர்