பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அதற்கென இங்கே வந்து, வடமொழிக்கே முதலிடம் என இந்திய அரசாங்கத்துக்கு எழுதி விட்டார். அப்போது தமிழ் நாட்டில் திரு. ஒமந்துரார் முதல்வர் . திரு. பக்தவச்சலம் கல்வி அமைச்சர். அவர்கள் அதை ஏற்காது என்னை அனுப்பி நிலை கண்டு வரச் செய்தனர். நான் தமிழே முதலிடம் பெறத் தக்கது எனக் காரணம் காட்டி விளக்கி னேன். சிங்கப்பூரில் (அப்போது மலேசியாவுடன் இணைந் திருந்தது) தமிழ் முரசு நடத்திய திரு. சக்கரபாணி அவர் களும் தம் நாளிதழில் வற்புறுத்தி எழுதியும் பல ஆயிர மக்கள் கையொப்பம் வாங்கியும் தமிழுக்குஆக்கம் தேடினார் இன்று மலேசியா பல்கலைக்கழக இந்திய மொழிப் பகுதியில் தமிழே முதலிடம் வகிக்கிறது. இன்று அதன் தலைவராக என் அரும்ை மாணவ நண்பர் திரு. தண்டாயுதம் இருக் கிறார். இதோ இன்று இங்கு அவருடனே தங்குகிறேன். இந்த எண்ணங்களுக்கிடையே, செட்டியாரும் மற்றவரும் விடைபெற்றபின் சிறிது ஓய்வு கொண்டு உணவு கொண் டேன். மணி 10க்கு மேலாகிவிட்டமையாலும் இன்று மழை யில் நனைந்து, விமான நெடும் பயணம் செய்ததால் உண்டான சேர்வினாலும் உடன் படுக்கச் சென்றேன்.