பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலாலம்பூர் 8.6.85 விடியற்காலையில் எப்போதும் போல் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டேன். ஆங்காங்கிற்கும் மலேசியாவுக்கும் நேரத்தில் மாறுபாடு இல்லை. இங்கே 7-30மணிக்குத்தான் சூரியன் தோன்றுகிறான். மணியைச் சற்றே தள்ளிவைத்துள்ளார். 7மணி நம் நாட்டிற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு 2மணி நேரம் இருந்ததை 2; ஆக ஆக்கியுள்ளார்களாம். எனவே விடியல் நீடிக்கிறது. மாலை 8.30க்குச் சூரியன் மறையும் போலும். காலை 8.30க்கு சிற்றுண்டி முடித்தோம். பின் 9-30க்குப் பல்கலைக்கழகம் சென்றோம். அங்கே (பல்கலைக்கழகம் விடுமுறை) ஆசிரியர் பதின்மர் இருந்தனர். அவர்களுடன் 10மணிமுதல் 12மணி வரை சற்றே என் உலகப் பயணம் பற்றியும் நம் நாட்டில் தமிழ் உள்ள நிலைபற்றியும் உலக நாடுகளில் தமிழர் வாழ்வு.வளம்,மொழி பற்றியும்கலந்துரை யாடினோம். பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை இவ்வளவு விரிவடைந்த நிலையினைக் கண்டு பெற்ற தாயினைப் போல் பெரிதும் மகிழ்ந்தேன். சிரம்பான் செட்டியார் அவர்களும் வந்திருந்தனர்.பின் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு வீடு வந்து உணவு கொண்டோம். நான் பார்த்த காலத்தைக் காட்டிலும் (35 ஆண்டுகளுக்கு முன்) தற்போது கோலலம்பூர் எவ்வளவோ விரிவடைந்த போதிலும் அதைக் காண அன்பர் கள் அழைத்த போதிலும், கடந்த நாட்களின் அலைச்சலா லும் நேற்றை மழையில் நனைந்தமையாலும் மிகவும் சோர் வுற்றிருந்தமையின் எங்கும் செல்லவில்லை. எனினும்