பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் இருந்தனர். 6 மணிக்குக் கடவுள் வாழ்த்துடன் கூட்டம் தொடங்க, தலைவர் முன்னுரையுடன், திரு. தண்டாயுதம் அறிமுகத்துடன் 6.15க்குப் பேசத் தொடங்கி ஒரு மணி நேரம் பேசினேன். சமய உண்மைகளையும் விழாக்களின் அடிப்படைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தில் சமயச் சடங்கு, பழக்க வழக்கம், கொள்கை, நெறி முதலியவை பற்றியும் பேசியதோடு கவாய் ஆதினத்தின் கொள்கை களைப் பற்றியும் கூறி, அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டிய சூழ்நிலையினை விளக்கி உரைத்தேன். கவாய் கொள்கையின் போக்கைக் கண்டித்து நால் எழுதிய அன்பரும் உடனிருந்தார். அவர் எழுதிய நூல்களையும். அவரிடம் பெற்றேன். (முன் கவாயில் படித்தறிந்த ஒன்று). கூட்ட முடிவில் தலைவர் மதுரைப் பல்கலைக்கழகத்தே சைவ சித்தாந்த வகுப்பு நடத்தத் தாங்கள் முயன்று மூன்று இலட்சம் ரூபாய் தந்தும் அது திறம்படச் செயல்படா நிலையை வருத்தத்துடன் தெரிவித்து, கூடுமானால் என்னை அதன் துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு ஆவன செய்து உதவுமாறு கேட்டுக்கொண்டார். தற்போது அத் துறையில் உள்ள திரு. கங்காதரன் அவர்தம் நேர்முகத் தேர்வில் நானும் ஒர் உறுப்பின்னாக இருந்தமை சொல்லி அப்போது, அத்துறை வளர்க்கவேண்டிய வகைபற்றிச் சொல்லி வந்ததைக் கூறி, மறுபடியும் உரியவர்களைக் கண்டு ஆவன செய்ய முயல்வதாகக் கூறினேன். இரவு 8ம்ணி அளவில் வீடு திரும்பினோம். நாளை நான் செய்யவேண்டிய பணிகள் பற்றியும் சிங்கப்பூரிலிருந்து தாயக்ம் செல்லவேண்டிய தகவல்கள் பற்றியும் பேசினேம். உணவு கொண்டபின் அடுத்து இங்கே அவர்கள் நடத்த இருக்கும் சைவ சித்தாந்த மாநாட்டினைப் பற்றிக்கூறி அதில் நான்கலந்து கொள்ளவேண்டும் என்று திரு. தண்டாயுதம் கூறினார். (1986 மே) நான் பிறகு முடிவு செய்யலாம் என்று கூறினேன். பின் உறங்கச் சென்றேன்.