பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலாலம்பூர்/சிங்கப்பூர் 9.6.85 48 தொறும் தமிழே பயிற்சிமொழியாகக் கொள்ளும் பள்ளிகள் உள்ளன. இடைநிலையிலும் 10,12ம் வகுப்புகளிலும் தமிழ்ப் பாடங்கள் உள்ள்வெனும், 15 மாணவர் இருந்தால்தான்' ஆசிரியர் நியமிக்கப்படுவராம். ஆனால் மாணவர் தனியாகப் படித்துத் தமிழில் தேர்வு எழுத இடம் உண்டாம். 10 மணிக்குத் திருக்கோயில் வழிப்ாடு தொடங்கிற்று. தண்டாயுதபாணி கோயிலாயினும் அங்கே வள்ளி,தெய்வ யானையோடு கூடிய முருகன், விநாயகர், சிறு உருவத்தில் கூத்தபிரான் போன்ற தெய்வங்களும் இருந்தன. வழி' பாடாற்றிய பின் அதன் சுற்றில் அமைந்த சொற்பொழிவு மண்டபத்தில் கூட்டம் தொடங்கிற்று. திரு. செட்டியார் அக் கோயிலில் அறங்காவலர் தலைவர்: பழங்காலம் முதற் கொண்டே சமூகப் பணியே தன் வாழ்வுப் பணி என வாழ் கின்றவர். இந்தியப் படை சுபாஷ் சந்திரபோஸ் தலைமை யில் இயங்கியபோது (1940-42)" இவர் சுபாசுக்கு அணுக்க நெறியில் அவருடன் தோளொடு தோள் சேர்ந்து பணிபுரிந் தவர். அக்காலத்தில் கையில் அடிபட்டு எலும்பு முறியும் அளவு தொண்டாற்றிச் சிறந்துள்ளார். தற்போது பல நிறுவனங்களில் பொறுப்பேற்றுச் செம்மையுற நடத்து கின்றார். பிற்காலத்தில் வரும் இளந் தலைமுறை வாழ்' வினை எண்ணி - நம்பண்பாடு எவ்வாறு நிலை குலைகின்றது என உளம் நைந்து, எப்படியாவது அவர்களை முன்னேற்ற வழிகாணவேண்டுமெனத் துடிக்கிறார். வயது எழுபத்தைந்து ஆனபோதிலும் இளையராய், காரினை'த்தாமே ஒட்டிக் கொண்டு ப்ல இடங்களுக்குச் சென்று சலியாது உழைக் கின்றார். அவர்கள் தலைமையேற்க, கூட்டம் தொடங்கப் பெற்றது. திரு. வடிவேலு வரவேற்க, செட்டியார்' முன்னுரை வழங்க, பின் நான் பேசினேன். எனது உலகப் பயணம் பற்றி முதலில் சிறிது விளக்கி, சைவ சமய நெறி பற்றி எடுத்துக் காட்டி, பின் வழுவிலா மணிவாசகர் பற்றி யும் சிறிது விளக்கினேன். பிள்ளைகள் மிக்க ஆர்வத்துடன் கேட்டனர். சுமார் நூறு பிள்ளைகளும் 40, 50 பெரியோர்