பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் களும் கூட்டத்தில் இருந்தனர். அனைவரும் 12.30 மணி வரையில் அமைதியாக இருந்து பங்கு கொண்டனர். 'மணிவாசகர் பணத்தைத் திருப்பி அனுப்பியதற்கு சான்று உண்டா? என ஒருவர் கேட்டார். அதற்கு நான் எழுதிய நூலிலேயே விளக்கம் உள்ளதைக்காட்டி, அவர் கோயில் கட்டியது அவர் பொருளே என்பதை விளக்கினேன். திருப்பி அனுப்பியதற்குத் தெளிந்த சான்று இருப்பின் இந்த வரலாறே இருந்திருக்காதே என்றேன். மற்றும் முறையற்ற வகையில் மற்றவர் பணத்தால் - அதுவும் அரச ஆணையை மீறி - செயலாற்றும் புன்மையுடைய ஒருவரால் எழுதப் பெற்றபாடல் இன்றளவும் காலம் - நாடு - மொழி - இனம் கடந்து வாழ முடியாது என்ற உண்மையினைப் பல சான்று கள் காட்டி விளக்கினேன். கூட்டம் முடிந்தபின் திரு. செட்டியார், வடிவேலு, ஆகியோருடனும் வேறு சில அன்பர்களுடனும் வீடு சென்று உணவு கொண்டோம். பொதுவாக, சமயம் மொழிபற்றியும் இந்நாட்டில் தமிழர் நிலையில் தாழ்ந்து வரும் தன்மை பற்றியும் சிறிது நேரம் பேசினோம். பின் ஒய்வு கொண்டு, கோலாலம்பூருக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தோம். இந்நாட்டிற்கே சிறப்பாக உரிய டொரியம் பழம்' என்ற ஒன்றினையும் மங்குஸ்தான் என்பதையும் செட்டியார் அவர்கள் உணவுக்குப்பின் வாங்கி உண்ணு மாறு சொன்னார்கள். மங்குஸ்தான் தற்போது நம் நாட்டிலேயே கிடைக்கிறது. மற்றொன்று கிடைப்பதரிது. அதன் மணம் ஏற்கக் கூடியதன்று. ஆனால் சுவை விடக் கூடியதன்று. வேடிக்கையாகச் சொல்லுவது உண்டு. "மூக்கைப் பிடித்துக்கொண்டு வாயில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பர். வழிநெடுக இரப்பர் மரங்களும் பாம் எண்ணெய் தரும் மரங்களும் காட்சி தந்தன. முன்பெல்லாம் இந்நாட்டு வாழ்வு இரப்பர் தோட்டங் களாலேயே அமைந்தது. ஆயினும் தற்போது பலர் பாம் ஆலிவ்' மரம் பயிரிடுகின்றனராம், நம் நாட்டுக்கு இந்த