பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலாலம்பூர் சிங்கப்பூ. 445 எண்ணெய் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பெறுகிறது. நம் நாட்டு உணவுப்பங்கீட்டு முறையில் இதற்கும் ஒரு முக்கிய இடம் உண்டு அல்லவா! ஆம்! இத்தகைய சிறு நாடுகளிட மும் கையேந்தி நாம் வாழ வேண்டியுள்ளது. காடுகளும் மலைகளும் பிற இயற்கை வளங்களும் நாட்டில் வற்றாத ஆறுகளையும் . ஒடைகளையும் பேரேரி களையும் பிறவற்றையும் வாழ வைக்கின்றன. காடு எங்கே . எந்த நாட்டில் செழித்து வளர்கின்றதோ அங்கெல்லாம் பருவமழை தவறுவதில்லை. விளையும் பயனும் கெடுவ தில்லை. இந்நாட்டின் பெருநகரங்களுக்கிடையிலெல்லாம் கூட அடர்ந்த காடுகள் உள்ளனவே. ஏன்? நான் பார்த்த பிற நாடுகளும் இத்தகையனவே. ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் ஜப்பானிலும் மலேயாவிலும் சிறு தீவுகளாகிய, ஆங்காங், சிங்கப்பூரிலும் அடர்ந்த சோலைகள் - காடுகள் . உள்ளனவே. மலைச்சரிவுகளை - பாறைகளைப் பார்க்க முடியவில்லையே. மரம் கா க் கு ம் - காடு வளர்க்கும் - செவ்வியை எல்லா நாட்டவரும் போற்றி வளர்க் கின்றனர். பல்கலைக்கழகங்கள் - பரந்த உ ய ர் ந் த அலுவலகங்கள் - நினைவுச் சின்னங்கள் அனைத்தும் சோலை கள் நடுவே - தண்ணிர்ச் சாலைகள் நடுவே அமைந்துள்ள தன்மையை நாடுதொறும் நேரில் கண்டு மகிழ வேண்டும். இங்கும் நீர் மின்சாரம் எடுக்கிறார்கள். அதற்கெனக் காடு களை அழிப்பதில்லை (இங்கும் நியாகாராவிலும் அடர்ந்த காடுகளுக்கிடையில் அவை அமைந்ததைக் கண்டேன்). மரம் மனிதனை வாழ வைக்கிறது: (மனிதன் விடும் நச்சுக்காற்றைத் தான் உண்டு அவன் உட்கொள்ள நல்ல காற்றைத் தருகின்றது. தன் கழிவுப்பொருள்களையும் தழைகளையும் அவன் உணவுக்கு எருவாக்குகிறது. தன்னையே அவனுக்குத் தந்து அவன் வீடுகட்டவும் உட்கார வும் வேறு வகைக்கும் மரப்பொருள்களாக) உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக எங்கோ செல்லும் மேகத்தை நிறுத்தி இங்கே மழை பெய்' என்று ஆணையிட்டு நிலத்