பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் ளுக்கு விளக்கினார். அதற்குள் ஒய்.எம்.சி.ஏ.'க்குத் தொலை பேசியில் தொடர்பு கொண்டேன். அவர்களும் விடுமுறை யில் இடம் நிறைந்துள்ளமையைக் கூறினர். சுவிஸ் விமான நிலையத்தார் கூறிய விடுதி கிடைக்கவில்லை. அதற்குள் அந்த மூதாட்டியார் எப்படியோ மனம் இரங்கி, ஏதோ ஒரு மூலையில் தங்க இடம் கொடுத்து, மறுநாள் அறை ஒதுக்குவ தாக வாக்களித்தார். - - பாரிஸ் நகரம் பெரியது. பல ஆயிரக்கணக்கான ஒட்டல் களை.தங்கும் இடங்கள் நாடொறும் ஒரு வேளை பல லட்சம் மக்களை - பிற நாட்டவரை-தங்கவைக்கும் அளவில் அவை செயல்படுகின்றன. ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டும் ஐம்பதுக்கும் குறைந்தும் வாடகை வாங்கும் வகையில் பலப்பல விடுதிகள் உள்ளன போலும். சில கேளிக்கை விடுதிகளாக - குடியும் பிறவும் மிகுதியாக உள்ள தன்மையில் உள்ள்னவாம். பாரிஸ் நகரை இரவில் வலம் வந்த நான் இந்த உள்ளீடுகளை அறிய முடியாவிட்டாலும் நகரின் பரப்பையும் பரபரப்பையும் அகன்ற விதிகளில் வளைந்தோடும் வாகனங்களையும், விண்ணோங்கிய மாளிகைளையும், மின்னொளியினையும் கண்டேன். இரவில் பாரிசைக் காண்’ என்ற பழமொழி எனக்கு நினைவு வந்தது. எனினும் முன்கூறியபடி அதன் உள்ளிடு எனக்குப் புரியாதது. ஒட்டல் மூதாட்டியார் ஒரு தனித்த இடத்தில் கட்டிலும் பிற வச்திகளும் செய்து தந்து, அந்த இரவில் அங்கே தங்குமாறுபணித்தனர். அதற்குள் மணி பத்தாகிவிட்டது: பகலில் பலவிடங்களில் உழன்ற நிலையிலும் காலம் கடந்த மையாலும் பசி இன்மையாலும் உடன் படுத்துக்கொண் டேன். எனினும் உறங்குமுன் முறையான இறைவணக்கம் செலுத்தினேன். பிறந்த பெர்ன்னாட்டினை விட்டு இன்று சற்றே தொலைவில் வந்ததனை நினைத்து, யாரும் வரவில் லையாதலால் நாளை என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணத்தோடு படுத்துக் கொண்டேன்; உறங்கினேன். காலையில் எப்போதும்போல் 5 மணிக்குக் கண்விழித்தேன்.