பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A46 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் தைப் பயிரிடப் பண்படுத்துகிறது. எத்தனை எத்தனையோ நூற்றாண்டுகளாக நம் நாட்டு பல பெரியவர்கள் இத்தனை யும் சொல்லி வைத்தும் எழுதி வைத்தும் சென்ற போதிலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மரங்கள் அழிக்கப்பெறுகின்றனவே. (அ ண் ைம யி ல் பெங்களுரில் நடைபெற்ற மாநாட்டில் அறிஞர் காட்டிய குறிப்பு நம்மை அலற வைக்கின்றதே). எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்ற பழம்பாடல் மறந்து, மனிதன் வன்கண்ணனாக மாற, இயற்கையும் அவன் வாழ்வைக் குலைக்கிறது. இவை எண்ணி, இனியாயி னும். பிறரைக் கண்டாயினும் நம் நாட்டு மக்களும் இந்நாட்டு மக்களும் நல்லது செய்ய முற்படுவார்களா? பகலில் (இரு நாட்களிலும்) வெப்பம் அதிகமாக இருந்தது. இந்நாட்டுக் காடுகள் பல அழிக்கப் பெற்ற மையே இதற்குக் காரணம் என்றனர். தமிழர் இங்கே அதிக மாக வாழ்வது காரணம் என்றனர். திரு. இரா. தண்டா யுதம் அவர்கள் வீட்டில் எங்கள் வருகைக்குக் காத்திருந் தனர். கவாய் மடத்துத் துறவியர் கோலாலம்பூரில் ஒரு அன்பரைக் காணுமாறு கொடுத்த குறிப்பின் வழி, அவரை மாலை 5 மணிக்கு வரச்சொல்லி இருந்தபடி, அவரும் வந்தார். பெயர் திருவாசகம்'. எனக்கு மகிழ்ச்சி. 'திருவாசகத்தை படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். நூலாகக் கண்டிருக்கிறேன். ஆனால் மனித உருவில் இன்று தான் காண்கின்றேன்." என மகிழ்வோடு கூறி அவர்களுட்ன் மடத்துச் சைவ சித்தாந்தக் கொள்கை பற்றிப் பேசினேன். இன்றைய நாட்டு நிலையிலும் சமயம் நாட்டில் மாற்றாரால் பெறும் நிலையினையும் கூறி, சில காலம் தத்துவத்தை மறந்து, சமயத்தை வளர்க்க வேண்டும் என வற்புறுத்தி னேன். இவ்வாறு தத்துவம் பேசியதால் சமயம் வீழ்ச்சி யடைந்த வரலாற்றைச் சுட்டினேன். இங்குள்ள அன்பர் களும் கவாய் ஆதினமும் சிறிது காலம் தத்துவத்தை மறந்து சமயம் வளர்ப்பதில் கருத்திருத்த வேண்டிய அவசியத்தை