பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலாலம்பூர்|சிங்கப்பூர் 9-4-85 447 வற்புறுத்தினேன். தேவையாயின் பின் அறிஞர் கூடி நின்று அதுபற்றி ஆராயலாம் என்றேன். அனைத்தையும் மடத்து க்கு எழுதுமாறும் கூறி விடைபெற்றேன். சிரம்பானில் திரு. செட்டியார் அவர்கள் சிங்கப்பூரில் நான் தந்த முகவரிக்கு உரியவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னை விமான நிலையத்தில் வந்து காண்பதாகவும் ஊரில் பலர் கடிதம் எழுதியுள்ளதாக வும் எல்லா உதவிகளையும் செய்வதாகவும் என் ஜப்பான் முகவரிக்குக் கடிதம் எழுதிய அந்த அன்பர் அவ்வாறு வர இயலாதென்றும் நான் அங்கே வரவேண்டாமென்றும் கூறினார். எனக்கு வியப்பாக இருந்தது. அவர்தம் முதலாளி உட்பட எழுதியும் அவரே அழைப்பதாக இசைந்தும் இப்படிச் சொல்லுகிறாரே என்று அனைவரும் வருந்தினர். "அப்பொழுது எழுதினேன் இப்பொழுது முடியாது’ என்று கூறினார். எனக்கும் இந்தப் பயணத்தில் இப்படி ஒரு பாடம் இருந்ததை எண்ணினேன். முன்பின் அறியாத நாடுகளில் யாரும் அறிமுகம் செய்யா நிலையிலும் . என்னைப் பரிந் தேற்று, உணவிட்டு, பாராட்டி, அன்பு காட்டிய அத்தனை அன்பு உருவங்களும் என்முன் நிழலிட்டன. இப்படியும் ஒன்றா என எண்ணினேன். எத்தாயர் வயிற்றில் பிறந்தார் களும் ஒத்தால் பரதன் பெரிதுத்தம னாவதுண்டோ என்ற கம்பன் அடி நினைவுக்கு வந்தது. மற்றவர்கள் பெருமை யைக் காட்டத்தான் இப்படிச் செய்தாரோ இவர் என நினைத்தேன். நல்ல வேளை செட்டியார் அவர்கள் அவருடன் சில காலம் இருந்து பணியாற்றியவரும் தற்போது சிங்கப்பூரில் செயலாற்றுபவருமாகிய மாணிக்கம் செட்டியார்என்பவருக்கு உடன்தொலைபேசியில் பேசினார். அவர் இல்லையாயினும் அவர்தம் துணைவியார் என்னை அவர்கள் வீட்டிற்கே வருமாறும் வேண்டியவற்றிற்குத் தாமே உடனிருந்து உதவுவதாகவும் கூறினாராம். செட்டியார் அவர்களும் அந்த அம்மையார் நிறைந்த அனுபவம் உடையவர்களென்றும், நம் நாட்டவர் வைத்