பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் துள்ள கடைகளுக்கும் பிற இடங்களுக்கும் அழைத்துச் சென்று எல்லாவற்றையும் காண உதவுவார்களென்றும் கூறினார். பின் மறுபடியும் 4 மணி அளவில் திரும்பவும் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, திரு. மாணிக்கம் செட்டியார் அவர்களிடமே எல்லாவற்றை யும் சொல்லி, பயண ஏற்பாடு முதலியவற்றைக் கவனித்துக் கொள்ள சொன்னார்கள். 7 மணி வரையில் அனைவரும் பேசிக் கொண்டிருந்து உணவு கொண்டு 7.45க்கு விமான நிலையம் புறப்பட்டோம். நான் வந்தபோது, அவ்வளவாகக் காணவில்லையாதலால் இன்று விமான நிலையத்தை நோக்கினேன். மிகப் பெரிய தாக இருந்தது. இங்கும் பல வெளி நாட்டு விமானங்கள் வந்து செல்லுமாம். நான் செல்ல வேண்டிய விமானம் சிங்கப்பூரிலிருந்து வந்து திரும்ப வேண்டுமாம். அது வரக் காலம் தாழ்த்தமையின் சுமார் ஒரு மணி நேரம் தாழ்த்து 9-30க்கு புறப்படும் என்றனர். இரு ஊர்களுக்கும் உள்ள தூரம் 220கல்லாக - சுமார் 35 நிமிடப் பயணத்துக்கு மணிக் கணக்காகக் காக்க வேண்டியிருந்தது. அவனவரும் அது வரை உடனிருந்து பின் பிரியா விடைபெற்றுச் சென்றனர். விமான நிலைய உட்புறத்திலும் விமானத்திலும், சிங்கப்பூரில் விமான நிலையத்திலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு முகமதிய நண்பர் என்னுடன் வலிய வந்து எல்லா உதவி களையும் செய்தார். என்னை அழைத்துச் செல்ல வந்தவர் (வெளியே) இருக்கிறார் என்று சொன்ன பிறகே அவர் விடைபெற்றுச் சென்றார். (இன்றேல் அன்று அவருடன் வந்து தங்கலாம் என்றார். நான் முன்னே குறிப்பிட்ட அந்த அன்பரையும் முன்பின் அறியாத இந்த முகமதிய நண்பரை -யும் எண்ணிப் பார்த்தேன்). - விமான நிலைய வாயில் திரு மாணிக்கம் செட்டியார் அவர்கள் காத்திருந்தார். உடனே ஒரு வாடகை வண்டி ஏற்பாடு செய்து வீட்டிற்கு இரவு 11-15க்கு வந்து சேர்ந் தோம். வீட்டில் அன்னையார் அவர்கள் வரவேற்று நன்கு